தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனிவரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் முந்தைய எபிசோடில் சீதா வக்கீல், ராம் என எல்லோரையும் நிற்க வைத்து தனக்காக வாதாடிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது சீதாவின் விசாரணைக்குப் பிறகு நீதிபதி, “சீதா தான் கொலை செய்தார் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால், அவரை விடுதலை செய்யலாம்” என்று தீர்ப்பு வழங்கப் போகும் கடைசி நிமிடத்தில், ஒரு நிமிஷம் என மகா நான்சி என்ற பெயரில் என்ட்ரி கொடுக்கிறார். 


“நான் மகாவின் உடன் பிறந்த தங்கை, என்னுடைய பெயர் நான்சி, நான் ஒரு அட்வகேட்” என தன்னை அறிமுகம் செய்து கொள்ள சீதா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் “இனிமே என்னுடைய அக்கா கொலை கேஸை நானே வாதாடப் போகிறேன்” எனவும் அனுமதி கோருகிறார் நான்சி. 


அதன் பிறகு சீதா வீட்டுக்கு வர, நான்சியும் வீட்டுக்கு வந்து மகாவின் சமாதிக்கு சென்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வீட்டிற்குள் வந்து எல்லோரிடமும் பேசுகிறாள். சீதா குறித்து கேட்டு தெரிந்து கொள்கிறாள்.


அதன் பிறகு வீட்டுக்கு வந்த அஞ்சலி, பிரியா, ஸ்வேதா ஆகியோர் நான்சியை சென்று சந்தித்து, “அப்படியே மகா சித்தி போலவே இருக்கீங்க, உங்கள எப்படி கூப்பிடுறது?’ என்று கேட்க, “என் பேரு நான்சி, என்னை பேர் சொல்லி கூப்பிடுங்க” என்று கூறுகிறாள்.   ‌ 


மறுபக்கம் இருவரும் சீதாவை சென்று நான்சியிடம் பேச சொல்ல, சீதா முடியாது என மறுக்கிறாள். இப்படியான நிலையில் எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Madurai Muthu: ”ரூ.1,000 கொடுத்தா சாமி வீட்டுக்கே வரும்..” அர்ச்சகர்களை சாடிய மதுரை முத்து


Vijay: இன்னும் ஒரு படம் நடிங்க.. அப்புறம் அரசியல் பண்ணலாம் - விஜய்க்கு அறிவுரை சொன்ன சீமான்!