சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 19) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கரிகாலனையும் அவனுடைய கூட்டாளியையும் அழைத்துக் கொண்டு ராமசாமியும் கிருஷ்ணாசாமியும் சித்தார்த்தைத் தேடி அழைக்கிறார்கள். அப்போது நந்தினி மற்றும் ரேணுகா பொருட்கள் வாங்குவதற்காக சென்று திரும்புவதைப் பார்த்து விடுகிறார்கள். அவர்கள் பின்னாலேயே பின்தொடர்ந்து சென்று அனைவரும் பதுங்கி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க செல்கிறார்கள்.
"நாம் எல்லாரும் கூட்டமா போனா சரியா வராது. நான் ஒத்தையில போய் மடக்கிப் பிடிக்கிறேன்" என் சொல்லி தனியாக செல்கிறான். "நீ மட்டும் கோட்டைவிட்டுட்டு வந்த நாங்களே மிதிச்சு கொன்னுடுவோம்" என ராமசாமி கரிகாலனை மிரட்டி அனுப்புகிறான். ஈஸ்வரி நந்தினி போன் செய்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ன நடந்தது என்பதைப் பற்றி விசாரிக்கிறாள். "வீட்ல யாரும் இல்லை. தர்ஷினியையும் எங்கேயோ கூட்டிட்டுப் போயிருக்காரு அவரு" என ஈஸ்வரி நந்தினியிடம் சொல்ல அவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
கரிகாலன் பின்தொடர்ந்து சென்று ஜனனி டீம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார். போலீசுக்கு சென்று சித்தார்த்தை கடத்திக் கொண்டு போய் வைத்து மிரட்டி கல்யாணம் செய்து வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் என சொல்லி புகார் கொடுக்கிறார்கள்.
போலீஸ் சென்று சித்தார்த்தை விசாரிக்கிறார்கள். அவன் என்ன உளறி வைக்கப் போகிறான் எனத் தெரியாமல் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். "அந்தப் பையன் மேஜர். அவன் விருப்பப்படி கல்யாணம் பண்ணி வைக்குறதுக்காக தான் அவன் எங்க கூட வந்து இருக்கான்" என ஜனனி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சொல்ல அவரும் சித்தார்த்திடம் "நீ விருப்பப்பட்டா பா வந்த" எனக் கேட்கிறார். அவன் என்ன சொல்லப் போகிறான் என அனைவரின் முகமும் படப்பிடிப்பில் உறைந்து போயிருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ.
தர்ஷினியை எங்கே கொண்டு போய் ஒளித்து வைத்து இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. சித்தார்த் சொல்லப் போகும் பதிலில் தான் அடுத்து கதைக்களம் எப்படி நகர போகிறது என்பது தெரியவரும். பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் சன் டிவி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.