தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் புதிதாக facebook அக்கவுண்ட்டை தொடங்கிய தனலட்சுமிக்கு சக்தி கொடுத்திருக்க, அதை தனலட்சுமி அக்செப்ட் செய்து அவனிடம் பேசத் தொடங்கிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
அதாவது சக்தி தனலட்சுமியிடம் நல்லவன் போல பேசி நம்ப வைத்து “நான் சொல்ற இடத்துக்கு வா.. என் பிரெண்ட்ஸ் எல்லாம் உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று சொல்ல, தனலட்சுமி சந்தோஷத்தோடு சரி என்று சொல்லி லேப்டாப் மூடி வைத்து விட்டு தூங்கி விடுகிறாள்.
மறுநாள் காலையில் சக்தியை பார்ப்பதற்காக அவ்வளவு அழகாக ரெடியாகி காலேஜில் பங்க்ஷன் என்று பொய் சொல்லி சிவராமுடன் கிளம்பிச் செல்ல, பவானி வந்ததும் அவளுடன் செல்வதாக சொல்லி கிளம்பிச் செல்கிறாள்.
பிறகு பவானியில் அனுப்பிவிட்டு தனலட்சுமி ஆட்டோவில் தனியாக சக்தி சொன்ன இடத்திற்கு வந்து இறங்குகிறாள். அங்கு சக்தி ஏற்கனவே கேமரா எல்லாம் செட் செய்து தன்னுடைய நண்பர்களுடன் ரெடியாக இருக்கும் நிலையில், தனத்திற்கு எதிராக மாயா வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.
பளார் என்று ஒரு அறை விட்டு “நீ இங்க எதுக்கு வந்த?” எனத் திட்டுகிறாள். சக்தி உள்ளிட்ட ரவுடிகள் இவர்களிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்ய மாயா அவர்களை எதிர்த்து சண்டை போடுகிறாள். பிறகு சிவராம் இந்த இடத்திற்கு வந்து இருவரையும் கூட்டிச் செல்ல மாயா “வீட்ல உண்மைய சொல்லிட்டா என்ன கொன்னுடுவாங்க” என்று தனலட்சுமி பவானியிடம் சொல்லி பயப்படுகிறாள்.
தனலட்சுமி வீட்டுக்கு வந்ததும் ஜானகி “என்னடி பண்ணி வச்சிருக்க? இதனால உங்க அப்பாவுக்கு தான் அவமானம்” என்று சொல்லி ஆவேசப்படுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் சீரியல் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவங்க தான்! சஸ்பென்ஸை உடைத்த அர்ச்சனா! ஷாக்கான விசித்ரா!
மேலும் படிக்க: Chinmayi: "பாலியல் சீண்டல் தந்த வைரமுத்துவுடன் மேடையை பகிர்வதா?" முதல்வர் உள்பட தலைவர்களுக்கு சின்மயி கேள்வி