சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் ஜனனியும் சக்தியும் வாங்கிய பேக்டரியில் மெய்யப்பன் குரூப் ஆட்கள் வந்து பூஜை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை கேள்விப்பட்டு பேக்டரிக்கு விரைந்த சக்தியையும் ஜனனியையும் பின் தொடர்கிறார்கள் ஜனனியின் அப்பா அம்மா. கோபத்துடன் சென்ற ஜனனி பூஜையை நிறுத்தி அங்கே இருந்த பெரியவர்களிடம் நியாயம் கேட்க அவர்கள் ஜனனியை அவமானப்படுத்துகிறார்கள். சக்திக்கும் ராமசாமிக்கும் இடையே கைகலப்பு நடக்க ஜனனியின் அப்பாவும் அம்மாவும் வந்து தடுக்கிறார்கள்.
அப்போது தான் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் பிரச்சினை செய்வது தன்னுடைய குடும்பம் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது தான் ஜனனிக்கு அவர்கள் யார் என்பதும் எப்படி அவர்கள் உறவினர்கள் என்பதும் தெரிய வருகிறது.
அந்த நேரத்தில் நாச்சியப்பன் வந்து நான் இதை எல்லாம் ஒரு காரணத்துக்காக தான் செய்கிறேன் என சொல்ல அதை எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் ஜனனியும் அவளின் அம்மாவும் நாச்சியப்பனை திட்டி அனுப்பி விடுகிறார்கள். அத்துடன் கடந்த வார எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜனவரி 2) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஜனனியின் அம்மா எங்கே செல்வது எனத் தெரியாமல் தவிக்க, சக்தி அவரை அவனுடைய வீட்டுக்கு அழைத்து வருகிறான். குணசேகரன் வீட்டு வாசலில் வந்து நின்ற ஜனனியின் அம்மா "ஏற்கனவே ஜனனிக்கு இந்த வீட்ல இருக்க கஷ்டம் போதாதா?" என தயக்கத்துடன் உள்ளே செல்ல மறுக்க "ஒரு கஷ்டமும் இல்லை. இந்த நிலைமையில அத்தையை தனியாக விடுவது சரியா வராது" என ஜனனியிடம் சொல்லி உள்ளே அழைத்து செல்கிறான்.
இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.