தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பிரின்சிபால் போன் போட்டு ரகுராமை பரிசு கொடுக்க அழைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, போட்டியின் இரண்டாவது ரவுண்டில் தனா சாதுரியாக விளையாடி வெற்றியை தனதாக்க கார்த்திக் அவள் விளையாட்டில் கவனத்துடன் தான் இருக்கிறாள் என்பதை புரிந்து கொள்கிறான். விளையாட்டு முடிந்ததும் பிரின்சிபால் தனாவை தனது ரூமில் உட்கார வைத்து வெளியே காத்திருக்கிறார்.
ரகுராம் காலேஜ் கிளம்பி வர ஜானகி “அந்தப் போட்டியில் கலந்துக்கிட்டு விளையாடியது தனா தான் தெரிந்தால் எல்லாமே முடிந்து போய்டுமே” என்று பதறி கொண்டிருக்கிறாள். ரகுராம் ப்ரின்ஸிபல் ரூம் அருகே நுழைவதைப் பார்த்து மாயா, சீனு ஆகியோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இவர் தனாவைப் பார்த்து “அவ்வளவு தான், தனா நல்லா மாட்டிக்கிட்டா” என்று பதறுகின்றனர். ரகுராம் ரூமுக்குள் நுழையப் போகும் சமயத்தில் கார்த்திக் நில்லுங்க என்று தடுத்து நிறுத்துகிறான், “நீங்க உங்க வீட்டு பொண்ணுங்கள அடிமை மாதிரி நடத்துறீங்க, இதே உங்க வீட்டு பொண்ணு இந்த விளையாட்டில் கலந்து கிட்ட ஜெயித்து இருந்தா நீங்க ஏத்துக்குவீங்க?” என்று கேள்வி கேட்கிறான். மேலும் உங்களுக்கு பரிசு கொடுக்க தகுதி இல்லை என்றும் சொல்கிறான்.
இதனால் கோபமாகும் ரகுராம் “அப்படினா தகுதி இருக்கவங்களையே கூப்பிட்டு பரிசு கொடுக்க சொல்லுங்க” என்று கிளம்பிச் செல்ல கார்த்திக் தனாவைக் காப்பாற்ற தான் இப்படி செய்ததாக மாயா, சீனு மற்றும் ப்ரிசிபாலிடம் சொல்ல மாயா சந்தோசப்படுகிறாள், இந்த விஷயம் எதுவும் தனாவுக்கு தெரியாத நிலையில் பரபரப்பான கட்டத்தில் இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Vishal: "என்னை சுற்றலில் விடுகிறார்கள்" ரத்னம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் விஷால் ஆவேசம்!
Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?