ஷ்ருதி ஹாசன்


நடிகை ஸ்ருதி ஹாசனும் (Shruti Haasan) சாந்தனு ஹஸாரிகா என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒரே வீட்டிலும் வசித்து வருகிறார்கள். தனது காதல் உறவைப் பற்றி எப்போதும் வெளிப்படையாக பேசி வருபவர் ஸ்ருதி ஹாசன் . இருவரும் ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது. இது தொடர்பாக ஸ்ருதி ஹாசன் விளக்கமும் அளித்திருந்தார். தனது காதல் வாழ்க்கையின் அழகான தருணங்களை எல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி. ஆனால் தற்போது அவர் தானும் தன்னுடைய காதலனும் சேர்ந்து இருக்கும் எல்லா புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காதலரை அன்ஃபாலோ செய்த காரணம் என்ன?


சிறிய காலத்திற்கு சமூக தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டியாக்டிவேட் செய்தார் ஸ்ருதி ஹாசன். திரும்பி வந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது காதலனுடனான எல்லா புகைப்படங்களும் நீக்கப்பட்டிருந்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார்கள்.


தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஸ்ருதி ஹாசன் “சமீப காலங்களில் என்னைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் நிறைய உண்மைகள் எனக்குத் தெரிய வருகின்றன” என்று பதிவிட்டிருந்தது பல்வேறு சந்தேகங்களை கிளப்பிவிட்டது. தற்போதை நிலவரப்படி ஸ்ருதி ஹாசன் மற்றும் சாந்தனு ஹஸாரிகா தங்கள் காதல் உறவை முடித்துக் கொண்டுள்ளதாகவும் இருவரும் கடந்த ஒரு மாத காலமாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாக  சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.


தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஸ்ருதி ஹாசன் இது தொடர்பான அதிகாரப் பூர்வமான விளக்கம் ஒன்றை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. 


ஸ்ருதி ஹாசன்  நடித்து வரும் படங்கள்


 கடந்த ஆண்டும் பிரபாஸ் நடித்த ‘சலார்’ படத்தின் மூலம் சினிமாவில் கம்பேக் கொடுத்தார் ஸ்ருதி ஹாசன். இதனைத் தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் இயக்கத்தில் சமீபத்தில் ’இனிமேல்’ பாடல் வெளியானது. கமல் எழுதிய இந்தப் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார்.  இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் டகோய்ட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் ஆதி விசேஷ்  நாயகனாக நடிக்க ஷனீல் தியோ இப்படத்தை இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கூலி படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தத் தகவல்கள் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.