கலர்ஸ் தமிழ் சேனல், தங்களது வரவேற்பு பெற்ற பிற மொழி சேனல் தொடர்களை தமிழில் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் சந்தியா என்ற தொடர் தற்போது வரவிருக்கிறது. இது ஒரு ஃபேன்டஸி த்ரில்லர் தொடர். ஆகஸ்ட் 21 முதல் இத்தொடரின் ஒளிபரப்பு தொடங்குகிறது.


திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது. தீபிகா சிங், நமிக் பால் மற்றும் வீண் ராணா உள்ளிட்டோர் இத்தொடரில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜியோ சினிமா மற்றும் வூட் ஓடிடி தளங்களிலும் ஒளிபரப்பாக உள்ளது.   


 



சந்தியா என்ற பெண்ணைச் சுற்றியே கதை நகர்கிறது. ஒரு சிவராத்திரி அன்று இரவு தோழிகள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் சந்தியா தனது சொந்த ஊரான சிவனந்தபுரத்திற்கு செல்கிறாள். அங்குள்ள சக்தி வாய்ந்த சிவன் கோயிலுக்கு செல்வது குறித்தும் அதற்கு பின்னல் இருக்கும் நம்பிக்கை பற்றியும் தோழிகள் மூலம் தெரிந்து கொண்டு சந்தியா வழிபாடு நடத்துகிறார்.


சிவனின் அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் தெரியும் என்பது ஐதீகம். சந்தியாவுக்கு அந்த சிவனின் அருள் கிடைக்கிறது. அதில் அவள் வருங்கால கணவனை காண்கிறாள். இதனால் அவள் அதிர்ச்சி அடைகிறாள். காரணம் அவள் தற்போது வேறொருவனை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள்.


இதற்கு காரணம் ஒரு தீய சக்தி. அது ஏன் சந்தியாவின் வாழ்க்கைக்குள் வரவேண்டும். வந்து என்ன செய்கிறது என்பது தான் சந்தியாவின் கதை. ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்தத் தொடரை 24/7 வூட் மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளங்களில் கண்டு ரசிக்கலாம். 


சின்னத்திரை ரசிகர்களுக்கு வழக்கம் போல் இல்லாமல் ஒரு திகில் தொடராக 'சந்தியா' ஒளிபரப்பாக உள்ளது என்பதால் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.