நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த சமயத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். 


கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இணையம் முழுவதும் ஒரு தம்பதி திருமணம் பற்றிய பேச்சுக்களே அதிகம் இடம் பெற்றிருந்தது. அது வேறுயாரும் இல்லை பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி கல்யாணம் தான். சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமானவர் மகாலட்சுமி. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இவர்  சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கியமானதாக அமைந்தது.  






இவர் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தரன் சந்திரசேகரை திருமணம் செய்துக் கொண்டதாக வெளியான தகவலை பலராலும் கற்பனை செய்துக் கொள்ள கூட முடியவில்லை. அதிக பருமனாக இருக்கும் அவரை மகாலட்சுமி பணத்துக்காக திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால் இந்த திருமணம் காதல் திருமணம்  என்றும், பணத்துக்காக பண்ணிருந்தாங்கன்னா என்னை விட எத்தனை பேரு நல்லா இருக்காங்களே. என்னை எதுக்கு பண்ணனும் என ரவீந்தர் - மகாலட்சுமி நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்தனர். 


இதனிடையே பல யூடியூப் சேனல்களுக்கு இருவரும் பேட்டியளித்த நிலையில் விஜய் டிவி கொஞ்சம் வித்தியாசமாக இந்த தம்பதியினரை வைத்து “வந்தாள் மகாலட்சுமியே” என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். நாளை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவில் ரவீந்தரும், மகாலட்சுமியும் தங்களது காதல், அதன் பின்னர் நடந்த திருமணம் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.






அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், சத்தமில்லாமல் நடந்த திருமணம் பற்றி தமிழ்நாடே பேசுதே என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, அதற்கு ரவீந்தர், “என்னுடைய திருமணம் சாதாரணமா திருப்பதி போய், நடந்த திருமணம். திருமண போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் எல்லோரும் பதிவிடுவது போல பதிவிட்டேன். ஆனால் அது நாட்டோட பிரதான பிரச்சனை மாதிரி மாறிடுச்சி. என்னை சார்ந்த எல்லோருக்கும் போன் வந்துச்சு..இந்த கல்யாணம் உண்மைதானா அப்படின்னு கேட்டு..நான் மகா குடும்பத்தாரையும் கூப்பிட்டு போய் தான் கல்யாணம் பண்ணேன். இவங்களை மட்டும் தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணல” என விளக்கமளித்துள்ளார்.