பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவுடனான திருமணத்தை தடுத்து நிறுத்த கோபியின் அப்பா திருமண மண்டபத்துக்கு வந்து அவரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது.
ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்தது, இருவரும் திருமணத்துக்கு தயாராகும் காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
அப்பாவை அவமானப்படுத்திய கோபி
ராதிகாவுடனான கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என சொல்லிக்கொண்டே கோபி கழுத்தில் இருந்த மாலையை ராமமூர்த்தி இழுக்க, ஆத்திரத்தில் அவரை கோபி தள்ளி விடுகிறான். அவரை பிடிக்கும் பாக்யாவிடம் 2 பேரும் வெளியே போங்க..அவ்வளவுதான் மரியாதை என சொல்கிறார். அங்கிருந்து மாமனாருடன் கிளம்பும் பாக்யாவிடம் கோபி, வாழ்க்கை ஒரு வட்டம். அன்னிக்கு என்னை வெளியே அனுப்புனீங்க.. இன்னைக்கு என்னோட டர்ன்...போங்க வெளியே என வசனம் பேசுகிறார்.
அதுவரை அமைதியாக இருந்த பாக்யா, கோபியிடம் சென்று, உங்க அப்பான்னு கூட பாக்காம அவமானம் படுத்திட்டீங்க...நாளைக்கு இதே நிலைமை பிள்ளைகளால உங்களுக்கு வரக்கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கோங்கன்னு மிரட்டி விட்டு ராமமூர்த்தியை கூப்பிட்டு மண்டப சமையலறைக்கு செல்கிறார். அங்கு அவரை சமாதானப்படுத்த பாக்யா முயற்சிக்க, ராமமூர்த்தியோ கோபியை கொன்றாவது இந்த கல்யாணத்தை நிறுத்துவேன் என ஆவேசமாகிறார். ஆனால் அது நடக்குற காரியமா... நம்மளால அது முடியுமா..நீங்க அவமானப்படுறதை என்னால பார்க்க முடியல..எங்களுக்கு நீங்கள் வேண்டும் என பாக்யா வருத்தத்துடன் தெரிவிக்க ராமமூர்த்தி அமையாகிறார்.
நம்பிக்கை கொடுத்த மண்டப ஓனர்
கல்யாண மண்டப ஓனர் ராஜசேகர் வந்து பாக்யாவிடம் ஏன் குடும்ப பிரச்சனையை கொண்டு வந்து இங்க காட்டுறீங்க என கேட்கிறார். பாக்கியா சாப்பாட்டுல நாங்க எந்த குறையும் வைக்கல. அதேசமயம் குடும்ப பிரச்சனை வரும்ன்னு எதிர்பார்க்கல. அதனால இந்த ஆர்டரை கேன்சல் பண்ணாதீங்க.என்னை நம்பி நிறைய பொண்ணுங்க இருக்காங்க. அதேபோல நாளைக்கு சாப்பாட்டுக்கும் எல்லாம் ரெடி பண்ணிட்டோம் என சொல்ல, உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரேன். ஆனால் பிரச்சனை வரக்கூடாது என தெரிவிக்கிறார்.
இதற்கிடையில் கோபி, பாக்யாவை மண்டபத்தை வெளியே அனுப்பும் பிளானை கைவிட்டு அவ இங்க இருந்து என்னென்ன நடக்குன்னு பார்க்கணும் என ராதிகா குடும்பத்தினரிடம் தெரிவிப்பது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.