சின்னத்திரை சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்ற கார்டு வருவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அப்படி ஒரு சீரியலில் ஒரு கதாபாத்திரமாக மக்கள் மனதில் பதிந்து விட்ட பிறகு சீரியலில் இருந்து விலகுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுக்கும். அதற்கு நடிகர்கள் தரப்பில் இருந்து பல்வேறு காரணங்கள் சொல்லப்படலாம். இழப்பு, உடல்நல பிரச்சினை, பிரசவம், வெள்ளித்திரை வாய்ப்பு, முக்கியத்துவம் இல்லாதது, வேறு பிரபலமான சீரியலில் மெயின் ரோல் இப்படி பல காரணங்கள் சொல்லப்படும். இது வழக்கமான இன்று தான்.
நடிகை ப்ரீத்தி சர்மா:
அந்த வகையில் 'கலர்ஸ்' தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'திருமணம்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை ப்ரீத்தி சர்மா. அவருக்கு நல்ல ஒரு வரவேற்பையும் பிரபலத்தையும் பெற்று கொடுத்தது சன் டிவியில் ஒளிபரப்பான 'சித்தி 2' சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரம் தான். ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகக் பெரிய செலிபிரிட்டியாக வலம் வந்தார் ப்ரீத்தி சர்மா. அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'மலர்' சீரியலில் நடித்து வருகிறார். சுமார் 400 எபிசோட்களை கடந்த இந்த சீரியலில் இருந்து தற்போது விலகியுள்ளார்.
ஏற்கனவே 'மலர்' சீரியலில் ஹீரோவாக நடித்தவர் விலகியதை அடுத்து தற்போது ஹீரோயினும் விலகியுள்ளது அந்த சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை சரிய செய்துள்ளது.
காரணம் என்ன?
ப்ரீத்தி சர்மா விலகல் சன் டிவி ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது. அதற்கு காரணம் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என பல நாட்களாகவே விருப்பம் இருந்துள்ளது. அது தொடர்பாக முயற்சிகள் எல்லாம் மேற்கொண்டு வந்துள்ளார். அதனால் தான் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என ஒரு சிலர் சொல்ல மற்றும் பலர் 'மலர்' சீரியலில் இனி வரும் கதைக்களத்தில் அவர் கர்ப்பவதியான நடிக்க வேண்டி உள்ளது. அப்படி நடிக்க விருப்பமில்லாததால் தான் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என தெரிவிக்கிறார்கள். இப்படி ப்ரீத்தி சர்மா விலகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் உண்மை என்ன என்பது இதுவரையில் தெரிவியவில்லை.
மலர் சீரியலில் ப்ரீத்தி சர்மா நடித்து வந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மோதலும் காதலும்' சீரியலில் வேதவாக நடித்த அஷ்வதி கமிட்டாகி நடித்து வருகிறார். அஷ்வதி எந்த அளவுக்கு மலர் சீரியல் ரசிகர்களை கவர்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.