Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தாரா ஜூஸைக் கொட்டிவிட்டு தேன் மொழியை கூப்பிட்டு கிளீன் பண்ண சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, தேன்மொழி கிளீனிங் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து மாரி அதிர்ச்சி அடைந்து தாராவிடம் வந்து சத்தம் போடுகிறாள். அதன் பிறகு தேன்மொழியை தனியாக அழைத்துச் சென்று மன்னிப்பு கேட்க, “அவ சித்தி கிட்ட செய்யாத வேலையா? பரவாயில்லை” என்று சொல்ல, மாரி “நீயும் என் தங்கச்சி மாதிரி தான்” என்று அன்போடு பேசுகிறாள். 


இதையடுத்து ஹாசினி தாராவின் போனை வைத்தே அவளது சூழ்ச்சியை அறிந்து கொள்ள முடிவெடுத்து போன் பண்ணி விட்டுத் தருவதாக சொல்லி போனை வாங்கி ரவுடியின் நம்பருக்கு டயல் செய்து, “இங்கே போலீஸ் வந்துட்டாங்க, அவங்கள எங்கேயாவது மறைச்சு வையுங்க” என்று சொல்லி ஃபோனை வைக்க, அவர்கள் ஒரு குடோனுக்கு அழைத்துச் சென்று காளீஸ்வரியை அடைத்து வைக்கின்றனர்.  


அதன் பிறகு அந்த குடோனுக்கு வரும் வெண்ணிலா காளீஸ்வரி மீட்கிறாள். பிறகு வெண்ணிலா ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையுடன் மண்டபத்துக்குள் நுழைகிறாள். இந்நிலையில், யார் அந்த குழந்தை எனும் சஸ்பென்ஸ் உடன் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.