தமிழின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வாரத்தை போலீஸ் வாரமாகக் கொண்டாடுகிறது. இதற்காக திங்கள் முதல் வியாழன் வரை போலீஸ் படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தப் படங்கள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகின்றன. 


அதன்படி இன்று 'ரைட்டர்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இப்படத்தில் சமுத்திரகனி போலீஸ் ரைட்டராக நடித்துள்ளார். அவர் மனைவியாக இனியா நடித்துள்ளார். பிராங்கின் ஜேக்கப் இப்படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு ரைட்டரின் வாழ்க்கையை சொன்ன படம். அப்பாவி ஆராய்ச்சி மாணவர் ஒருவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட எழுத்தாளரான சமுத்திரக்கனி இந்த விவகாரத்தில் சிக்கிக் கொள்கிறார்.  குற்ற உணர்வும் வருத்தமும் பெருகிய நிலையில், அவர் அந்த இளைஞரைக் காப்பாற்ற என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை.


தொடர்ந்து நாளை விறுவிறுப்பான திரைப்படமான 'சேசிங்' ஒளிபரப்பாகிறது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருடன் நடிகை சோனா, சூப்பர் சுப்பராயன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.வீரகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமை 'ட்ரிக்கர்' படம் ஒளிபரப்பாகிறது. அதர்வா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் உள்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ஜிப்ரான் இசையமைத்து பி.எஸ்.மித்ரன் இப்படத்துக்கு வசனங்களை எழுதி இருந்தார்.