சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 



ஜனனியும் சக்தியும் அப்பத்தாவின் ரூமில் இருக்கிறார்கள். நம் அனைவரும் மண்டபத்துக்கு சென்றதும் உங்க அண்ணன் ஏதோ பிளான் பண்ணி செய்து இருக்கிறார். ஆனால் என்ன செய்தார் என்பது தான் தெரியவில்லை. அது வரையில் சிசிடிவி கேமரா வைக்க போகிறேன் என மிரட்டியவர், அப்பத்தா உடல் நலம் சரியில்லாமல் போனதையும் அது பற்றி கண்டுக்கவே இல்லை என சொன்ன ஜனனி திடீரென சக்தியை அழைத்து கொண்டு எதிர் வீட்டுக்கு செல்கிறாள்.  


 


சக்தியும் ஜனனியும் எதிர் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்து ஆதிரை திருமணத்துக்காக அனைவரும் மண்டபத்தில் இருந்த போது யார் வீட்டுக்கு வந்து அப்பத்தா கைரேகையை எடுத்தது என்பதை தெரிந்து கொள்ளலாம் என எதிர் வீட்டில் இருப்பவரிடம் சென்று விசாரித்து சிசிடிவி புட்டேஜ் பார்க்கிறார்கள். அதில் ஜீவானந்தம் வீட்டுக்குள் நுழைவது தெரிந்தாலும் அது யார் என்பது ஜனிக்கும் சக்திக்கும் தெரியாததால் அவர்கள் அது குணசேகரன் அனுப்பிய ஆட்கள் என நினைத்து கொள்கிறார்கள். 




ரேணுகா, நந்தினி மற்றும் ஐஸ்வர்யா அரசு பள்ளிக்கு சென்று ஐஸ்வர்யாவின் விருப்பம் குறித்து ஆசிரியையிடம் தெரிவிக்கிறார்கள். ஆசிரியை அரசு பள்ளி பற்றியும் அங்கு மாணவர்களுக்கு கொடுக்கும் செயல்முறை கல்வி குறித்தும் அழகான விளக்கம் கொடுக்க ரேணுகாவும் நந்தினியும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மூவரும் திரும்பி வரும் போது இந்த விஷயத்தில் ஸ்ட்ராங்காக இருப்பது குறித்து பேசி கொண்டு வருகிறார்கள். 


 



சக்தியும் ஜனனியும் கௌதமை அழைத்து பேசுகிறார்கள். அப்பத்தாவுக்கு, குணசேகரன் சொத்தில் 40% ஷேர் எழுதி வைத்து இருப்பது சமீபத்தில் தான் எங்களுக்கு தெரியவந்தது. அப்பத்தாவை மிரட்டி குணசேகரன் கையெழுத்து வாங்கியுள்ளார். அதற்கு பிறகு தான் அப்பத்தா உடல்நலம் சரியில்லாமல் கோமோவாவுக்கு சென்றுவிட்டார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருக்கும் போது அடிக்கடி ஜனனியிடம் ஒருவரின் பெயரை சொல்லி கொண்டே இருந்தாராம். அவர் பெயர் ஜீவானந்தம். அப்பத்தா போனில் இருந்த நம்பரை வைத்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன் ஆனால் ஒரு பெண் தான் போனை எடுப்பார். பட்டம்மாள் பேத்தி என சொல்லியதும் போனை கட் செய்து விடுவார். அதற்கு பிறகு என்னுடைய நம்பரை பிளாக் செய்து விட்டார். என்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்துவிட்டேன் இருப்பினும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 


 



வீட்டுக்கு சிலர் வந்தது சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. வேலை செய்பவர்களை ஏதோ ஒரு காரணம் காட்டி வெளியில் அனுப்பி வைத்துள்ளார்கள் என்றால் அது நிச்சயம் என்னோட அண்ணன் வேலையாக தான் இருக்கணும் என சொல்லி புட்டேஜில் இருந்த அந்த நபரின் போட்டோவை கௌதமிடம் காட்டுகிறார்கள்.


ஜீவானந்தம் போட்டோவை பார்த்து ஷாக்கான கெளதம் இவரை இதுவரையில் பார்த்ததில்லை. ஆனால் என்னால் முடிந்த அளவு நான் முயற்சி செய்கிறேன் என கௌதம் சொல்கிறான். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.