தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியலில் தமன்னா அண்ட் கோ-வின் தடைகளை மீறி பொம்மி கர்ப்பமான நிலையில், வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, பொம்மியின் குழந்தையின் நலனுக்காக கர்ப்ப கால பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. தமன்னாவின் ஆட்கள் இந்த பூஜையில் பங்கேற்க வரும் பெண்கள் பொம்மியாக தான் இருக்கும், இவர்களைத் தடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.
பொம்மியின் அவதாரங்களாக ஐந்து தேவிகளாக ஐந்து ஜீ தமிழ் நடிகைகள் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களைத் தடுக்க தம்மன்னாவின் ஆட்கள் ஏற்பாடுகள் செய்ய அடுத்து நடக்க போவது என்ன? பொம்மி இதையெல்லாம் எப்படி முறியடிக்க போகிறாள் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஐந்து நடிகைகளில் வீரா சீரியல் வைஷ்ணவி, புதுப்புது அர்த்தங்கள் பார்வதி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகியோர் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன, இந்நிலையில் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகளை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.