Ethirneechal Written Update : எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜூன் 6) எபிசோடில் குணசேகரன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார். "குணசேகரன் சொல்லி தான் நான் ஜீவானந்தத்தை சுட போனேன் ஆனால் தெரியாமல் அவனுடைய பொண்டாட்டியை சுட்டு விட்டேன். அப்பவும் இந்த கதிர் அங்கே இருந்து வராமல் ஜீவானந்தத்தை சுட்டே தீருவேன் என நிக்குறான். அவனை இழுத்துட்டு வரதே பெரிய விஷயமா இருந்துச்சு" என்கிறார் கிள்ளிவளவன். தம்பியை பற்றி சொன்னதும் குணசேகரனுக்கு கோபம் வருகிறது. அடுத்ததாக ஆதிரையை விசாரிக்கிறார்கள். ஆதிரை நடந்த அத்தனை விஷயங்களை பற்றி குணசேகரன் என்னென்ன கொடுமை எல்லாம் செய்து இருக்கிறார் என்பதை சொல்லியும் அழுகிறாள். அவருக்கு தகுந்த தண்டனை கொடுக்க சொல்லி நீதிபதியிடம் கெஞ்சுகிறாள்.
ஜனனி அப்பத்தாவை பிளான் பண்ணி கொன்றதை பற்றி மனம் வருந்தி சொல்கிறாள். அந்த நேரத்தில் அப்பத்தா கோர்ட்டில் என்ட்ரி கொடுக்கிறார். கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட அப்பத்தா திரும்பி வந்ததை பார்த்து குணசேகரன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
மிகவும் விறுவிறுப்பாக எதிர்நீச்சல் சீரியலின் இறுதி பகுதி வாரத்திற்கான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்பத்தாவின் என்ட்ரி அனைவரையும் உலுக்கி இருக்கும் நிலையில் அவர் வந்து என்ன சொல்ல போகிறார் என்பதை அடுத்த எபிசோடில் தெரியவரும்.