விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ "நீயா நானா". அன்று முதல் இன்று வரை கோபிநாத் மட்டுமே தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் உள்ளது. வாராவாரம் ஒவ்வொரு தலைப்பு குறித்து விவாதிக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் விவாதிக்கப்பட இருக்கும் தலைப்பு பேறுகால கொண்டாட்டங்கள் அதிகமாவதை ஆதரிப்போர் vs  எதிர்ப்போர். இந்த காலத்து தலைமுறையினர் கர்ப்ப காலத்தை ஃபேண்டஸியாக கொண்டாடுகிறார்கள். அதை பற்றி விவாதிக்கிறது இந்த வார நீயா நானா நிகழ்ச்சி.



பேறுகால கொண்டாட்டத்தை ஆதரிப்போர் தரப்பில் இருந்து எதையெல்லாம் அவர்கள் கொண்டாட்டமாக நினைக்கிறார்கள் என்பதின் தொகுப்பாக கூற சொல்லி கேட்கப்பட்டது. கணவனும் மனைவியும் குழந்தை பிறப்பதற்கு முன்னர் வெளிநாடு அல்லது வெளியூர் எங்காவது போய் தங்குவதை பேபி மூன் என அழைக்கிறார்கள்.


திருமணத்துக்கு பிறகு கணவன் மனைவி இருவரும் ஹனிமூன் சென்று தனிமையை கொண்டாடுவதை போல குழந்தை பிறப்புக்கு முன்னர் இந்த பேபி மூன் கொண்டாடப்படுகிறது. குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்கு பெரிதாக கணவன் மனைவியாக என்ஜாய் செய்ய முடியாது. அது தான் இதன் கான்செப்ட். 


பாரம்பரியமாக வளைகாப்பு நடத்துவது போல வெஸ்டர்ன் டைப்பில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. இதில் கணவன் மனைவி எந்த அளவுக்கு குழந்தையை வரவேற்க ஆயுத்தமாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் சில ஃபன் கேம்ஸ் இடம்பெறும் என ஒரு கர்ப்பவதி சொல்கிறார். 




மகப்பேறு காலத்தில் ஒவ்வொரு மாதமும் வயிறு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மோல்ட் காஸ்டிங் மூலம் உருவாக்கி வைத்து கொள்வது. குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை நட்பும் உறவும் வோட்டிங் மூலம் யூகிப்பது. இப்படி கர்ப்ப காலத்தை ஃபேண்டஸியாக கொண்டாட நினைப்பவர்கள் பட்டியலிட்டனர். 


அதை எதிர்க்கும் எதிரணியில் இருந்த ஒருவர் "இவர்களை சொல்வதை கேட்கும் போது தலையே சுற்றுகிறது. அந்தரங்கம் என்பது என்ற ஒன்று இந்தக் காலத்தில் இல்லவே இல்லை. அனைத்தையும் வெளிப்படையாக காட்டிவிடுகிறார்கள். கர்ப்பமாக இருப்பதையே அந்த காலத்தில் வெளியில் சொல்ல மாட்டார்கள். டெஸ்டிங் கூட செய்து பார்த்தது கிடையாது. வயிற்றை தொட்டு பார்த்து குழந்தையின்  தலையா அல்லது காலா என்பதை எல்லாம் உணர்வதே இருவருக்கும் அத்தனை சந்தோஷமாக இருக்கும். 







இந்த காலகட்டத்தில் வயிறை காட்ட வேண்டும் என்பதற்காகவே டிரஸ் போடுகிறார்கள். அப்போது நாங்கள் வயிறு வெளியில் தெரிந்தால் கண் பட்டுவிடும் என முந்தானையால் மறைத்து கொள்வோம். இன்று நீங்க எதை மறைவாக வைத்து இருக்கீங்க?" என அவரது தரப்பை வெளிப்படுத்துகிறார். 


இப்படியாக இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சி இரு தரப்பினர் அவரவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.