சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான 'நந்தினி' திகில் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் ராகுல் ரவி. தனது முதல் சீரியலிலேயே நல்ல வரவேற்பை பெற்ற ராகுல் ரவி தொடர்ந்து சாக்லேட், கண்ணான கண்ணே உள்ளிட்ட தொடர்களில் லீட் ரோலில் நடித்து இருந்தார்.  


 



கல்யாணமாகாத அப்பா :


சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராகுல் ரவி 'நந்தினி' சீரியலில் நடித்தது குறித்து போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் கல்யாணமாகாத நான் புருஷன், அப்பா கதாபாத்திரங்களில் நடித்ததால் எதிர்காலத்தில் என்னுடைய வருங்கால மனைவிக்கு நல்ல ஒரு கணவனாக எப்படி இருக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன் என்ற ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். 


வாழ்க்கை துணை :


அதே போல 2020ல் ராகுல் ரவியின் திருமணம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய வருங்கால மனைவியை சந்தித்த தருணம் குறித்து போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். தன்னுடைய காதலி லட்சுமி நாயரை ராகுல் ரவி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. 


 



கசந்த காதல் :


திருமணமான புதிதில் புதுமண ஜோடி அவர்களின் சந்தோஷமான தருணங்களின் ரீல்ஸ், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளினர். கல்யாண வாழ்க்கை கொஞ்ச நாளிலேயே கசந்து போக இருவருக்கும் இடையில் ஏராளமான கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் நடைபெற அது கடைசியில் உறவு விரிசலை ஏற்படுத்தியது. அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை என்பது தெரிய வருவதற்கு முன்னரே பெரிய கலவரமாக மாறி போலீஸ் ஸ்டேஷன் வரையில் சென்றது. 


பிரச்சினைக்கு என்ன காரணம் : 


ராகுல் ரவி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தான் இந்த பிரச்சினைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. கையும் களவுமாக மனைவியிடம் மாட்டியும் கொண்டாராம் ராகுல் ரவி. அதனால் மனைவியை கை நீட்டி அடித்துள்ளார். இதனால் அவரின் மனைவி லட்சுமி நாயர், ராகுல் ரவி மீது போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளார். ராகுல் ரவி முன் ஜாமீன் கோரிய நிலையில் அவரின் பெயில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது தலைமறைவாக பதுங்கி விட்டாராம் ராகுல் ரவி. எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதால் நடிகரை மிகவும் தீவிரமாக வலைவிரித்து தேடி வருகிறார்கள் காவல்துறையினர். 


சின்னத்திரை வட்டாரத்தில் ராகுல் ரவி - லட்சுமி நாயர் பிரச்சினை ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.