சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் இதுவரையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். நந்தினிக்காக சமையல் ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நந்தினிக்கு சமையல் ஆர்டர் கிடைப்பது போல ஒரு ஆப்பை ஜனனி உருவாக்கி கொடுத்து இருக்கிறாள். அதன் மூலம் நந்தினிக்கு சமையல் ஆர்டரும் கிடைக்க, சமைக்கச் சென்ற இடத்தில் விருந்தாளியாக நந்தினியின் அப்பா வர நந்தினியை அங்கே பார்த்து அதிர்ச்சி  அடைகிறார். ”இனிமேல் எனக்காகவும் தாராவுக்காகவும் தான் வாழ போகிறேன்” எனப் பேசி அவரை சமாதானம் செய்கிறாள் நந்தினி.



குணசேகரன் கதிரை சென்னைக்கு அழைத்துச் செல்ல திட்டம் போடும் போது, இடையில் புகுந்த நந்தினி "இரண்டு நாளா தாரா ஸ்கூலுக்கு போகணும் என சொல்லி கொண்டு இருக்கிறேன். அங்க நீங்க வரணும் இல்லைனா எனக்கும் இந்தப் பிள்ளைக்கும் சம்பந்தம் இல்லைன்னு எழுதி தரணும்" என அதிரடியாக சொல்ல குணசேகரனும் கதிரை ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறார்.


ஸ்கூலுக்கு சென்ற கதிர் தாராவின் ஆசிரியையையும் மரியாதை இல்லாமல் பேசிவிட்டு வந்து விடுகிறான். காருக்குச் சென்ற கதிரை மர்ம நபர்கள் சிலர் மோசமாகத் தாக்குகிறார்கள். மயக்கமடைந்த கதிரை பார்த்து நந்தினியும் தாராவும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.


 




அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியானதில் கதிரை ஹாஸ்பிடலில் சேர்த்து இருப்பதாக நந்தினி குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கிறாள். ஈஸ்வரிக்கு தகவல் வரவும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி ஜனனியிடம் சொல்ல இருவரும் ஹாஸ்பிடலுக்கு விரைகிறார்கள்.


 



குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் ஹாஸ்பிடலுக்கு பதட்டத்துடன் வருகிறார்கள். அப்போதும்கூட விசாலாட்சி அம்மா நந்தினியை தான் திட்டுகிறார். "நீ தானே அவனை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போன? அவனுக்கு எப்படி அடிபட்டது" என கேட்கிறார்.


 



“ஹாஸ்பிடலில் உள்ள நர்ஸ் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க வேண்டும், அதனால் இதில் கையெழுத்து போடுங்கள்” என பார்ம் ஒன்றை நந்தினியிடம் நீட்ட "சீக்கிரம் கையெழுத்து போடும்மா" என ஞானம் சொல்ல "நான் எதுக்கு போடணும்?  அது தான் ரத்த சொந்தம் அது இதுனு பேசுவீங்கள... நீங்களே போடுங்க...செல்லுதான்னு பார்ப்போம்" என ஞானம் பக்கம் பார்மை நீட்ட ஞானம் அமைதியாகி விடுகிறார். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)  எபிசோடுக்கான ஹிண்ட்.