Mr & Mrs. Chinnatirai: போட்டி போடாமலேயே முதலில் எலிமினேட் ஆன ஜோடி யார்? - Mr & Mrs சின்னத்திரை ஏவிக்ஷன்
விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோ நடத்தப்படுகிறது. அதில் கணவன் மனைவியாக வந்து போட்டியில் பங்கேற்கும் Mr & Mrs சின்னத்திரை ஷோ மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மூன்று சீசன்களாக வெற்றி பெற்ற இந்த ஷோ தற்போது Mr & Mrs சின்னத்திரை நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்கள்களின் ஃபேவரட் ஷோ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எத்தனை ஜோடி போட்டியாளர்கள் :
Mr & Mrs சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியின் நடுவர்களாக நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினியும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக ஆல் டைம் ஃபேவரட் மகாபா ஆனந்த் மற்றும் சின்னத்திரையின் நயன் தாரா அறந்தாங்கி நிஷாவும் நிகழ்ச்சியினை கலக்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பரீனா, சிங்கப்பூர் தீபன், மதன், ரேகா, அஜய் கிருஷ்ணா போன்ற பல பிரபலங்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 10 ஜோடிகள் கலந்து கொண்டு சிறப்பாக போட்டியிட்டு வருகின்றனர்.
முதல் எலிமினேஷன்:
சமீபத்தில் தான் Mr & Mrs சின்னத்திரை சீசன் 4 ஆரம்பித்தது. கடந்த வாரம் தான் இந்த நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. அதில் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பங்கேற்றனர். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி பங்கேற்க முடியாமல் போனது. அவர்களிடம் நிறைய எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்ஸி ஜோடி தாங்கள் இந்த போட்டியில் இருந்து விலகி கொள்கிறோம் என்று தெரிவித்தனர். இந்த அறிவிப்பு Mr & Mrs சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
சூப்பர் சிங்கர் பயணம்:
அஜய் கிருஷ்ணா விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் போட்டி மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் பாடகர் உதித் நாராயணன் போல பாடுவதில் கெட்டிக்காரர். அதனால் இவர் செல்லமாக உஜெய் கிருஷ்ணா என்று அழைக்கப்படுவார். உதித் நாராயணன் குரலில் அவர் பல பாடல்களை பல பிரபலங்கள் முன்னர் பாடி பலரது பாராட்டை பெற்றுள்ளார். உலகளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த போட்டியில் அவர்கள் தான் இளம் திருமண ஜோடிகள்.
சில தவிர்க்க இயலாத காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி போட்டியில் இருந்து விலகியதால் நடுவர்கள் இருவரும் கலந்து ஆலோசித்து அவர்கள் இருவரையும் Mr & Mrs சின்னத்திரை சீசன் 4 போட்டியில் இருந்து எலிமினேட் செய்வதாக முடிவு எடுத்துள்ளனர்.