Meenatchi Ponnunga July 3rd: திருட்டு பழியால் மீனாட்சி எடுத்த சபதம், சக்தி செய்யப்போவது என்ன? மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன?

Continues below advertisement

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில், பஞ்சாயத்தில் தன்னிடம் தான் நகைகள் இருக்கிறது என்று கொண்டு வந்து மீனாட்சி கொடுக்கிறாள். இதைக் கோயில் பூசாரி தான் கொடுத்து வைக்க சொன்னார் என்று சொல்கிறாள். 

Continues below advertisement

ஆனால் பூசாரி நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று பழியை மீனாட்சியின் மீது போடுகிறான். இதனால் அனைவரும் மீனாட்சி திருடி என்று நினைத்து விட, மீனாட்சி உண்மையை நிரூபிக்கும் வரை நான் அன்னம், தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்று சொல்கிறாள்.


அதன் பிறகு மீனாட்சிக்கு திருட்டுப் பட்டம் கட்டி விட்டதால் ஊர் மரியாதை, பரிவட்டம் புஷ்பா தனக்குத்தான் என்று ஊர்க்காரர்களிடம் சொல்லி விட, ஊர்க்காரர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் சாந்தா மீது கோரக் காளி வந்து ஆடி யார் உண்மையான திருடன் என்று கண்டுபிடிக்கட்டும் என்று சொல்ல, ஊர்க்காரர்கள் அது மிகவும் கோரமான சாமி என்று சொல்கிறார்கள். பின் மீனாட்சியும் ஒப்புக்கொள்கிறாள்.


அம்மாவின் மீது விழுந்த திருட்டுப் பழியை எப்படி போக்குவது, என்ன செய்வது என்று ஷக்தி யோசிக்கிறாள். இப்படியான நிலையில், அடுத்ததாக நடக்கப்போவது என்ன எனும் பரபரப்புடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola