ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘மீனாட்சி பொண்ணுங்க’. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சம்மந்தி முறை செய்ய கோயிலுக்கு கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது, சக்தி மீனாட்சிக்கு ஃபோன் செய்ய மீனாட்சியின் ஃபோனை சங்கிலி எடுத்து மீனாட்சிக்கு ஆபத்து என்பது போல் கிண்டலாகப் பேச சக்தி உடனே அம்மாவை சென்று பார்க்க வேண்டும் என்று வெற்றியிடம் சொல்லி புறப்படும் நேரத்தில் ரங்கநாயகி வந்து “காப்பு கட்டி இருக்கு” எனத் தடுத்து நிறுத்துகிறாள். மேலும் எப்போது மீனாட்சி வருவார்கள் என்று கேட்கிறாள், வந்துவிடுவார்கள் என்று சக்தி சமாளிக்கிறாள். 


இங்கே மீனாட்சியும் யமுனாவும் கலசத்தை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வருகிறார்கள். அதற்குள் விழாஆரம்பித்து விட புஷ்பாவும் சங்கிலியும் கலச சொம்புடன் ரங்கநாயகியின் வீட்டிற்கு வருகிறார்கள். “நானும் உங்களுக்கு சம்மந்தி முறைதான். எனவே நான் சம்மந்தி மரியாதை செய்கிறேன்” என்று புஷ்பா சொல்ல, அதற்குள் மீனாட்சியும் யமுனாவும் வேகமாக வந்து சேர்ந்து, வழியில் சில இடஞ்சல்கள் ஏற்பட்டு விட்டதாகக் கூறி மீனாட்சி சம்பந்தி மரியாதை செய்து கலச சொம்பை ரங்கநாயகிக்கு கொடுக்கிறாள். 


பிறகு கலச சொம்பு எடுத்துக்கொண்டு வரும்போது சங்கிலி இடைமறித்து பிரச்சனை செய்ததாக ரங்கநாயகியிடம் கூற, ரங்கநாயகி புஷ்பாவையும் சங்கிலியையும் திட்டுகிறாள். ஆனால் புஷ்பா மீனாட்சி பொய் சொல்வதாக சொல்லிவிட்டு ரங்கநாயகி வீட்டிலிருந்து வெளியேறுகிறாள். உடனே புஷ்பா பூஜா கோகிலா மூவரும் திட்டம் போடுகிறார்கள். 


“என் மகனுக்கு டைவர்ஸ் அப்ளை செய்தும் மீனாட்சி பயப்படவில்லை, மெஸ்ஸை புஷ்பாவின் பெயரிலும் அவள் எழுதிக் கொடுக்க சம்மதிக்கவில்லை” என்று கோகிலா கூற, மீனாட்சியை என்னதான் செய்வது என்று அனைவரும் யோசிக்கிறார்கள். இதுதான் சரியான நேரம் ரங்கநாயகிக்கு கல்யாண விழா காப்பு கட்டி இருப்பதால் சக்தியும் எங்கும் வரமாட்டாள். ஆதனால் மீனாட்சி இப்போது தனியாக மாட்டிக் கொண்டிருக்கிறாள் அவளை கொலை செய்து விடுவோம் என்று புஷ்பா திட்டம் போடுகிறாள். 


இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.