விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய (நவ.02) எபிசோடில் பாக்கியா பழனிச்சாமியை சந்தித்து எழில் வாழ்க்கையில் வந்துள்ள புதிய பிரச்சினையை பற்றி சொல்லி கண்கலங்குகிறாள். கணேஷ் வீட்டில் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு இருப்பது குறித்தும் சொல்கிறாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை கோபி பார்த்து விடுகிறார்.
வீட்டில் இனியா காய்ச்சலுடன் படுத்துக்கொண்டு இருக்க, ராதிகா வந்து இனியாவுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறாள். அப்போது கோபி வந்து அதைப் பார்த்து ராதிகாவுக்கு நன்றி சொல்கிறார். கோபி, ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரியிடம் சென்று இனியாவுக்கு காய்ச்சல் அடிப்பது பற்றியும் ராதிகா அவளை கவனித்துக் கொள்வது பற்றியும் சொல்லி பாக்கியா ஊர் சுற்ற சென்றுவிட்டாள் என சொல்லி திட்டிக்கொண்டு இருக்கிறார். அப்போது பாக்கியா வீட்டுக்கு வரவே ஈஸ்வரியும் "உனக்கு பொறுப்பில்லை" என சொல்லி பாக்கியாவைத் திட்டுகிறார்.
ராமமூர்த்தி பாக்கியாவை போக சொன்னதும் பின்னாடியே கோபி சென்று "எங்க போயிட்டு வர என எனக்கு தெரியும்" என சொன்னதும் "இன்னும் என்னை ஃபாலோ பண்றதை விடலையா?" என பாக்கியா கேட்கிறாள். ராதிகா இனியாவிடம் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அப்படியே சென்று விடுகிறாள் பாக்கியா.
பேங்க் ஆட்கள் கோபியை தேடி வீட்டுக்கு வருகிறார்கள். ஈஸ்வரி கோபியை அழைத்ததும் அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபி தனியாக அழைத்து சென்று ஒரு வாரம் டைம் கேட்கிறார். அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை ஈஸ்வரி பார்த்துவிடுகிறார். "ஏன் கோபி உனக்கு கிரெடிட் கார்டு எல்லாம் வாங்குவது பிடிக்காதே. இப்போ எப்படி. பாக்கியா கொடுத்த பணத்தை என்ன பண்ண?" என்ன கேட்க "அது பாத்துக்கலாம் அம்மா" என சொல்லி சமாளித்து விடுகிறார்.
உள்ளே அழைத்து சென்று கோபியிடம் "இத்தனை நான் நீ கவுரவமாக இருந்த. இப்போ எதுக்கு இது போல அசிங்கம். இதை வைத்து உன்னுடைய கடனை எல்லாம் தீர்த்து விடு" என சொல்லி தன்னுடைய நகைகளை எல்லாம் கொடுக்கிறார் ஈஸ்வரி. கோபி கண்கலங்கி அம்மாவை கட்டி அணைத்து "நான் பாத்துக்குறேன் அம்மா" என சொல்லி நகைகளை திருப்பி கொடுத்து விடுகிறார்.
எழில், அமிர்தா மற்றும் நிலா உடன் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்க, பாக்கியா சொல்ல வந்தது கூட சொல்லாமல் அவர்களையே கவலையுடன் பார்த்து கொண்டு இருக்கிறாள். பழனிச்சாமி பாக்கியாவுக்கு போன் செய்து பேசுகிறார். "கணேஷ் பற்றின விஷயத்தை பற்றி எழிலிடம் சொல்லித்தான் ஆகவேண்டும். நிச்சயம் அதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்" என ஆறுதல் சொல்கிறார் பழனிச்சாமி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) சீரியல் முடிவுக்கு வந்தது.