தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம் என்று சொல்லி தீபாவை சமாதானம் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, பாட்டுப் போட்டி தொடங்க மலர் “நான் தான் முதலில் பாடுவேன்” என்று ஸ்டேஜ் ஏறி பாடாமல் தயக்கத்திலேயே இருக்கிறாள். இதற்கான காரணம் என்ன என்பது தெரிய வரும் வகையில் பிளாஷ்கட் ஓபன் ஆகிறது. தீபாவும் மீனாட்சியும் பேசி முடித்ததைத் தொடர்ந்து தீபா பாட்டு பாடி பயிற்சி செய்ய, இதைக் கேட்ட மலர் மிரண்டு போகிறாள்.
தீபாவுடன் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி தான் என உணர்ந்து கொண்டதால் பாடாமல் அப்படியே மயக்கம் போட்டு விழுந்தது போல் நடித்து போட்டியில் இருந்து தப்பிக்கிறாள். இதனால் இந்தப் போட்டி தடைபட ஐஸ்வர்யா தீபாவுக்கு எதிராக என்ன செய்வது என யோசித்து அம்மாவுக்கு போன் செய்கிறாள்.
அவளது அம்மா நகையை திருடி தீபா மீது பழி போடலாம் என்று சொல்ல, மலர் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து நகையை திருடி தீபா பேக்கில் வைத்து விடுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய் கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.