ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
நேற்றைய எபிசோடில் ஷக்தி புஷ்பாவிடம் சபதம் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, சங்கிலியும் புஷ்பாவும் நீதிமனியை பாலோ பண்ணிக் கொண்டு செல்ல நீதிமணி ஒரு கோவிலுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு ஒரு அகோரியை சென்று சந்திக்கிறார். அகோரியிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்துவிட்டு வந்து விடுகிறார்.
இதை சங்கிலி அறிந்து கொண்டு அகோரியைச் சென்று பார்த்து அவர் கொடுத்த பத்திரத்தை கேட்க, அகோரி சங்கிலியை அடித்து அனுப்புகிறார். புஷ்பாவும் சென்று பார்க்க புஷ்பாவையும் அகோரி அடித்து அனுப்புகிறார். பிறகு அகோரியிடம் இருந்து வந்த உதவியாளர் நீதிமணி கொடுத்த பேப்பரை எடுத்து வந்து கொடுக்க அதை படித்துப் பார்க்க அதில் புஷ்பாவின் குடும்பம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நீதிமணி அகோரியிடம் பிரார்த்தனை செய்து பேப்பரில் எழுதி இருந்ததை அறிந்து கொள்கிறார்கள்.
மறுபக்கம் சக்தி இன்டர்வியூ அட்டென்ட் செய்யாமல் பதட்டத்தில் வெளியேறியதால் சக்தியிடம் யாரும் பேசாமல் இருக்கிறார்கள். சக்தியை அனைவரும் திட்டி அட்வைஸ் செய்கிறார்கள். உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள் ஆனால், ”நீ இன்டர்வியூ முடிக்காமல் வந்து விட்டாய். ஒரு நாள் மீனாட்சி அம்மா போல் கஷ்டப்பட்டு வேலை செய்து பார், அப்போது தெரியும்” என்று வெற்றி சொல்ல, சக்தி ஒரு நாள் மெஸ்ஸில் வேலை செய்வதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.