ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், “வெற்றி யாரையும் அடிக்க கூடாது” என்று சக்தி அவன் கையில் சாமி கயிறு கட்டி விட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம்!


“கயிறு கட்டிய மறுநாள் வெற்றிக்கு கோபம் வருகிறதா, இல்லையா என்று பரிசோதிக்க சக்தி இரண்டு ரவுடிகளை வரச் சொல்லி மீனாட்சி மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வெற்றியிடம் வம்பு இழுக்க சொல்கிறாள். 




வெற்றி இது எல்லாம் சக்தியின் திட்டம் தான் எனத் தெரிந்து கொண்டு அவர்களை அடிக்காமல் சமாதானம் பேசுகிறான். திடியன், கிரிவலம் இருவரும் “ஏன் இப்படி மாறிவிட்டீர்கள்?” என்று வெற்றியிடம் கேட்க, “சக்தி கையில் கயிறு கட்டி விட்டாள் இனி நான் யாரையும் அடிக்க மாட்டேன்” என்று சொல்ல, இதை சங்கிலி கவனித்து விடுகிறான். 


மறுநாள் துர்கா கல்லூரிக்குச் செல்லும் போது வழியில் வந்த சங்கிலி துர்காவை கிண்டல் செய்து பிரச்சனை செய்கிறான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வெற்றி, எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறான். அப்போது சங்கிலி வெற்றியை அடிக்கிறான், வெற்றி ஒரு அடி கூட திருப்பி அடிக்காமல் இருக்கிறான். 




சங்கிலி துர்காவின் துப்பட்டாவை பிடுங்கி அருகில் உள்ள ஒரு கம்பில் கட்டி வைத்து விடுகிறான். துர்கா வெற்றியைப் பார்த்து “சங்கிலியை ஏன் ஒரு அடி கூட நீங்கள் திருப்பி அடிக்கவில்லை?” என்று கேட்க, வெற்றி தன் கையில் கட்டி இருக்கும் கயிற்றைக் காட்டுகிறான். இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.