ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 


நேற்றைய எபிசோடில் சக்தி மற்றும் வெற்றி நடிப்பதை கையும் களவுமாக கண்டுபிடிக்க காரில் சங்கிலி மைக்கை பொருத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


காரில் வெற்றியும் ஷக்தியும் சங்கிலி செட்டப் செய்து வைத்திருக்கும் மைக்கில் பதிவாவதற்காக சண்டை போடுவதை போல் நடிக்கிறார்கள். இதை மொபைல் போனில் கேட்டுக் கொண்டிருக்கும் பூஜா உண்மையான சண்டையென நம்பி விடுகிறாள்.


வெற்றியும் சக்தியும் சண்டை போடுவது உண்மைதான் என நினைத்து வெற்றியின் காரில் வந்து கொண்டிருக்கும் மீனாட்சி, யமுனா, துர்கா என மூவரும் வருத்தத்துடன் காரை விட்டு இறங்கி கொள்கிறார்கள். 


மீனாட்சியம்மா ரங்கநாயகியின் வீட்டுக்குச் சென்று வெற்றிக்கும் சக்திக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க, ரங்கநாயகியின் வீட்டில் வந்து இருக்கும் புஷ்பாவும் பூஜாவின் அம்மாவும் வெற்றிக்கும் சக்திக்கும் பிரச்சனை என்று சொல்கிறார்கள்.


மீனாட்சி நேரடியாக வெற்றியைக் கேட்க, “எனக்கு சக்தியை பிடிக்கவில்லை, பூஜாவை தான் பிடித்திருக்கிறது” என்று சொல்லி விடுகிறான். இதனால் மீனாட்சி வருத்தத்துடன் கிளம்பும் போது சரளா, “வெற்றிக்கு சக்தியை பிடிக்கவில்லை என முடிவான பிறகு வெற்றி கட்டிய தாலி சக்தியின் கழுத்தில் ஏன் இருக்க வேண்டும்” என்று கேட்க மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.