Meenakshi Ponnunga: யமுனாவை திருமணம் செய்ய விரும்பும் கார்த்திக்...மீனாட்சியின் முடிவு என்ன?

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

Continues below advertisement

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் யமுனாவை திருமணம் செய்ய கார்த்தி விருப்பம் தெரிவிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளது. 

Continues below advertisement

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார்.வ் விறுவிறுப்பாக போகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை காணலாம். 

நேற்றைய எபிசோடில் சக்தி ஒருநாள் கலெக்டராக செயல்பட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார். இதனால் அவரை அனைவரும் வாழ்த்துகின்றனர். இதனைத் தொடர்ந்து சக்தி ஒருநாள் கலெக்டராக சிறப்பாக செயல்பட்டதாக துர்கா, யமுனா இருவரும் மீனாட்சியிடம் பெருமையாக சொல்கின்றனர். இதனால் சந்தோசத்தில் மீனாட்சி சக்தியை இறுக்கி அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள்.

அந்நேரம் அங்கு வரும் வெற்றி ஐஏஎஸ் அகாடமி டிரைனிங்க்கு லெட்டர் வந்திருப்பதாக சொல்லி மீனாட்சியிடம் கொடுத்து சக்தியிடம் கொடுக்க சொல்கிறான். மீனாட்சி ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த ஏற்பாட்டை செய்ததாக வெற்றி சொல்கிறான். இதனைத் தொடர்ந்து துர்கா யமுனாவிடம் வெற்றி எதற்காக இவ்வளவு உதவிகள் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டு சந்தேகப்படுகிறாள். 

பின்னர் மெஸ்ஸிற்கு வரும் கார்த்திக் யமுனாவை பார்த்து சாப்பாடு வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்ல இலையின் அடியில் தாலி வைத்துவிட்டு செல்கிறான். அதனைப் பார்த்து பதட்டமாகும் யமுனா என்னவென்று விவரம் கேட்க, தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கார்த்தி சொல்கிறான்.

யமுனாவோ மீனாட்சியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று  சொல்ல, கார்த்தி வேகமாக சென்று மீனாட்சியிடம் தன் விருப்பத்தை தெரிவித்து இன்று மாலை அம்மாவுடன் வந்து பேசுவதாக சொல்லி கிளம்பிச் செல்கிறான்.

மீனாட்சி கார்த்திக் சொன்ன விவரத்தை சக்தியிடம் பகிர்ந்து கொள்கிறார். அதற்கு சக்தி நல்ல வரன் தானே வரட்டும் என்று சொல்கிறாள். இதனையடுத்து மீனாட்சி மற்றும் பெண்கள் வீட்டை அலங்காரம் செய்வதற்கு தயாராவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

Continues below advertisement