Meenakshi Ponnunga Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம் ரங்கநாயகி கைதால் வெற்றிக்கும் சக்திக்கும் இடையே பிரிவு உண்டான நிலையில் வரும் நாட்களில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, புஷ்பா ரங்கநாயகிக்கு போன் செய்து உங்க பொண்ணு அங்க இருந்தால் கொன்னுடுவாங்க என்று ஏற்றி விடுகிறாள், அடுத்து ரோட்டில் நடந்து வரும் சரண்யா திடீரென மயங்கி விழ, சங்கிலி ஆட்டோ ட்ரைவர் போல் வேடம் போட்டு வந்து சரண்யாவை கடத்திச் சென்று ஒரு குடோனில் அடைக்கிறான்.
மீனாட்சி கடவுளிடம் வேண்டும்போது சாமி முன்பு தோன்றி சரண்யாவை அடைத்து வைத்திருக்கும் இடத்தைப் பற்றி சொல்ல அங்கு சென்று ரவுடிகளை அடித்துப் போட்டு சரண்யாவை காப்பாற்றுகின்றனர். பிரசவ வலியில் துடிக்கும் அவளுக்கு மீனாட்சி பிரசவம் பார்க்கிறாள். பிறகு மீண்டும் வரும் ரவுடிகள் சரண்யாவை கடத்திச் செல்ல மீனாட்சி குழந்தையுடன் தப்பி வருகிறாள். குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருக்க கோயிலுக்கு வந்து கடவுளை வேண்ட சாமி அருள் கொடுக்க குழந்தை அழுகிறது.
சரண்யாவை ஹாஸ்பிடலில் அனுமதிக்க “ரங்கநாயகிக்கு அந்த மீனாட்சியே பிரசவம் பார்த்து இருக்கா” என்று ஏற்றி விட ரங்கநாயகி வெற்றி ஆகியோர் ஹாஸ்பிடல் வருகின்றனர். “என்ன பொண்ணை கொன்னுட்டிங்க” என்று ஆவேசப்படுகிறாள். ஷக்தி “வெற்றி நான் சரண்யாவை எப்படி பார்த்துகிட்டேனு உனக்கே நல்லா தெரியும்” என்று சொல்ல வெற்றி அம்மாவுக்கு செய்த சத்தியத்திற்காக சக்தி ஆதரவாக பேச மறுக்கிறான்.
இதனைத் தொடர்ந்து மீனாட்சி அங்கு குழந்தையுடன் வர ரங்கநாயகி போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சரண்யாவின் புருஷன் அசோக் அவனது அம்மா ஆகியோர் ஷக்தி மேல தப்பு இல்ல என்று பிரச்னை செய்கின்றனர், இப்படியான பரபரப்பான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.