Meenakshi Ponnunga: வின்னர் வின்னர் பைவ் ஸ்டார் டின்னர்.. மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
Meenakshi Ponnunga: ஒவ்வொரு நாளும் ஐந்து போட்டியாளர்கள் வீதம் மொத்தம் ஐந்து நாட்களுக்கு 25 அதிர்ஷ்டசாலி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகையின் போது சீதா விட்டு சீதனம் என்ற பெயரில் போட்டி ஒன்றை நடத்தியது. அதாவது சீதாராமன் சீரியலின் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிக்கும் 5 அதிர்ஷ்டசாலி போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுப் புடவை, மற்றும் அரை சவரன் மோதிரம் ஆகியவை பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வெற்றியாளர்களின் விவரங்கள் நேற்று புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய ‘நினைத்தேன் வந்தாய்’ தொடரின் இறுதியில் அறிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்த போட்டியை அறிவித்துள்ளது ஜீ தமிழ். வின்னர் வின்னர் 5 ஸ்டார் டின்னர் என்ற பெயரில் இந்த போட்டி நடைபெற உள்ளது. அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலைப் பார்த்து அதில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும்.
Just In




ALSO READ | Bhavatharani: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்
ஒவ்வொரு நாளும் ஐந்து போட்டியாளர்கள் வீதம் மொத்தம் ஐந்து நாட்களுக்கு 25 அதிர்ஷ்டசாலி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் ( அதிகபட்சம் 4 நபர்கள் ) இணைந்து சென்னையில் உள்ள மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் டின்னர் சாப்பிடும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
எனவே நேயர்கள் தவறாமல் மீனாட்சி பொண்ணுங்க சீரியலைப் பார்த்து பரிசுகளை தட்டிச்செல்லுமாறு சீரியல் குழு ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க: Blue Star Review: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சிறந்த படம் - ப்ளூ ஸ்டார் படத்தின் விமர்சனம் இதோ!