Ilayaraja Daughter Bhavatharini: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி(Bhavatharini) காலமானார். இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி இளையராஜா மற்றும் ஜீவா ராஜய்யா தம்பதியினருக்குப் பிறந்தார்.
இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார். புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மரணம். பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடி மக்கள் மனதில் குடிகொண்டு தேசிய விருதை வென்றவர் பவதாரணி. இவர் இன்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி மாலை 5.30 மணிக்கே காலமானதாக கூறப்படுகின்றது. புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை சென்னைக்கு விமானம் மூலம் அவரது உடல் கொண்டுவரப்படுகின்றது. இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜாவும் இலங்கையில் உள்ளார்.
தந்தை இளையராஜா சகோதரர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோரது இசைகளில் இசையமைத்துள்ளார். இவர் இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். இவரது குரலில் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் பாரதி படத்தில் வரும் மயில்போல பொண்ணு ஒன்னு பாடலுக்கும், ராமன் அப்துல்லா படத்தில் இடம் பெற்றுள்ள என் வீட்டு ஜன்னல் வழி ஏன் பாக்குற பாடலுக்கு எப்ப்போதும் தனி ரசிகர்கள் உண்டு. அதேபோல் அழகி படத்தில் வரும் ஒளியிலே தெரிவது தேவதையா பாடலுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.
கடந்து 5 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் இன்று காலமானார். இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சபரிராஜ் ஹோட்டல் தொழில் செய்து வருகின்றார். பவதாரிணியைப் பொறுத்தவரையில் பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பின்னர் இவர் சமீபமாக மூன்று படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தாதாக கூறப்படுகின்றது.
ரேவதி இயக்கத்தில் ஷோபனா நடித்த மித்ர் மை ஃபிரெண்ட் என்ற படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார். இவரது இசையில் இலக்கணம், அமிர்தம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்திப் படமான பிர் மிலாங்கே படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
Bhavatharini Songs: சோகத்தில் ராஜா குடும்பம்; மனதை மயக்கிய பவதாரிணியின் பாடல்கள் லிஸ்ட்