காய்கறி வெட்டுவதில் கை தேர்ந்த சமையல்காரரை போன்று ப்ரெளன் மணி மிகவும் வேகமாகவும், நேர்த்தியாகவும் காய்கறிகளை வெட்டிக்கொண்டிருக்கிறார். இதை குடும்பத்தினர் வியந்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பின் ரோகினியை அவரை ரூமுக்குள் அழைத்துச் சென்று ப்ரெளன் மணியை திட்டுகிறார். நான் கூப்பிடும் வரை வெளியே வரக்கூடாது என சொல்கிறார்.
இதனையடுத்து முத்து, தன் நண்பனிடம் ”ப்ரெளன் மணியை பார்த்தால் ரோகினிக்கு மாமா மாதிரி தெரியல” என சொல்கிறார். ”இந்த பார்லர் அம்மா ரொம்ப நாளா மலேசியா அப்பா பணக்கார்னு கதை சொல்லிக்கிட்டு இருந்துச்சி. இப்போ திடீர்னு ஒரு மாமா வந்து நிக்குறான். இதுல ஏதோ கோல்மால் இருக்குடா” என முத்து சொல்கிறார்.
மீனா போட்ட கோலத்தை ஸ்ருதி பாராட்டுகிறார். இதை விஜயா கலாய்க்கிறார். ”சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம ஆக வேண்டிய வேலையை பாருங்க” என பாட்டி சொல்கிறார். முத்து பாட்டியிடம் விளையாடுகின்றார். பாட்டி முத்துவின் காதை திருகி சும்மா இருக்க மாட்டியா என்கிறார். பாட்டி பட்டுப்புடவையில் பளபளனு இருப்பதாக சொல்கிறார். முத்து பாட்டியை தூக்குகிறார். அதற்கு பாட்டி ”உன் பொண்டாட்டி இருக்கா அவளை போய் தூக்கு” என சொல்கிறார். அதற்கு முத்து மீனாவை கலாய்க்குறார்.
ரோகினி அறையினுள் சென்று ப்ரெளன் மணியை எழுப்பி வெளியே அழைத்துச் செல்கிறார். அண்ணாமலை, ப்ரெளன் மணியிடம், “இங்க பொங்கல் ரொம்ப விசேஷம் நீங்க மலேசியாவுல இருக்கீங்க, அங்க இப்படியெல்லாம் செய்வீங்களா?” எனக் கேட்கிறார். ”பொங்கல் அன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கும், அதிகமா வியாபாரமே நடக்காது” என சொல்கிறார் ப்ரெளன் மணி. அனைவரும் அவரை ஒருமாதிரி பார்க்கின்றனர். ரோகினி அதை சமாளிக்குறார்.
“எந்த ஊருக்கு போனாலும் நடை, உடை மாறலாம், ஆனா உணர்வு மாறாது இல்லீங்களா?” என அண்ணாமலை சொல்கிறார். அதற்கு ப்ரெளன் மணி , ”தமிழ் உணர்வுன்றது நம்ம ரத்தத்துல ஊறி இருக்கு. இப்படி தான் கப்பலோட்டிய தமிழன் ட்ராமாவுல” என சொல்ல வருகிறார். ”ட்ராமாலயா? ”என முத்து கேட்கிறார். அப்போது ”நான் ஸ்கூல் படிக்கும் போது ட்ராமவுல நடிச்சத சொல்கிறார்” என ரோகினி சமாளிக்குறார்.
மீனா, ரோகினி, ஸ்ருதி மூன்று பேரும் மூன்று பானையில் பொங்கல் வைக்கின்றனர். பின் ப்ரெளன் மணி பொங்கலை சாப்பிட்டு விட்டு ”ரத்தப் பொரியல் சாப்பிட்டா மாதிரி இருக்கு” என சொல்கிறார். அனவரும் அவரை வித்தியாசமாக பார்க்கின்றனர். பின் அவர் ஜோக் எனக் கூறி சமாளிக்கிறார். பின் அனைவரும் குடும்பமாக நின்று செல்ஃபி எடுத்து கொள்கின்றனர். இந்த போஸ் அழகாக இருப்பதாக அண்ணாமலை ஸ்ருதியை பாராட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.