விஜய் டிவி சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு ரியாலிட்டி ஷோகளுக்கும் பெயர் போனது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. அப்படி விஜய் டிவியில் டிரேட் மார்க் நிகழ்ச்சிகளில் ஒன்று 'அது இது எது'. சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் நிகழ்ச்சியில்களில் ஒன்றாக இருந்தது. சினிமாவில் சிவகார்த்திகேயன் பிஸியானதால் அவருக்கு பதில் மா.கா.பா. ஆனந்த் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். 


 



 


பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தான் ராமர், வடிவேல் பாலாஜி மற்றும் பல காமெடியன்கள். கடந்த 2009ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் 2017ம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த இரண்டு சீசன்களுமே  சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. சிரிச்சா போச்சு, குரூப்ல டூப்பு, மாத்தி யோசி என வித்தியாசமான ரவுண்டுகள் பார்வையாளர்களின் கவனம் பெற்றது. கவலைகளை மறந்து சிரிக்க கூடிய ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியாக இருந்த 'அது இது எது' நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ப்ரோமோ ஒன்று தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


 



வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவில் மா.கா.பா. புதிய கட்சி ஒன்றை துவங்க உள்ளார் என பத்திரிகையாளர்கள் கூடியிருக்கிறார்கள். பிரஸ் மீட் மூலம் அரசியல் கட்சி துவங்குவதை ட்ரோல் செய்யும் வகையில் மிகவும் ட்ரெண்டிங்காக இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது கட்சி மீட்டிங் இல்ல பாஸ் 'அது இது எது' சீசன் 3கான பிரஸ் மீட் என மாகாபா சொன்னதும் கூடி இருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் வாய்விட்டு சிரிக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே இப்படி சிரிப்பொலியாக இருக்கிறதே, நிகழ்ச்சி துவங்கியதும் எப்படி இருக்கும்? என நிகழ்ச்சிக்கு பயங்கர பில்ட் அப்புடன் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள்.  


 







முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த 'அது இது எது சீசன் 3' ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனையும் விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளரான மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷம். விரைவில் இந்த நிகழ்ச்சி என்று முதல் ஒளிபரப்பாக உள்ளது என்றும் அது ஒளிபரப்பாகும் நேரம் குறித்தும் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.