Maari Serial Today Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெண்ணிலாவுக்கு தாராவின் நடவடிக்கைகள் மேல் சந்தேகம் வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, மாரி குழந்தையை தத்தெடுத்து விட்ட நிலையில் அவளுக்கு பால் சுரக்காத காரணத்தால் கஷ்டப்பட வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை சொல்ல வீட்டிற்கு வந்திருந்த பெண்மணி ஒருவர் கை வைத்தியம் செய்கின்றனர். 


ஆனாலும் மாரிக்கு பால் சுரக்காத காரணத்தினால் சித்தரை வர வைத்து விஷயத்தை சொல்லி, வழி என்ன என்று கேட்கின்றனர். சித்தர் "இதற்கு ஒரு பரிகாரம் இருக்கு, கோமாதா சிலையை வாங்கி வைத்து பூஜை செய்ய வேண்டும்" என்று சொல்கிறார். அப்படி செய்தால் இந்த பிரச்னை நிவர்த்தி ஆகும் என்று சொல்ல, மாரி அந்த பரிகாரத்தை செய்வதற்கான நல்ல நேரம் குறித்து கேட்கிறாள். 


உடனே சித்தர் இன்னைக்கு சாயந்திரம் பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்ல, உடனே அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. மாரி பயபக்தியோடு கோமாதா சிலையை வைத்து பரிகார பூஜையை செய்து முடிக்க சித்தர் சொன்னது போல பிரச்னை நீங்கி பால் சுரக்க தொடங்க குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமடைகின்றனர். 


வழக்கம் போல் தாரா உன்னுடைய சந்தோசத்தை சீர்குலைக்கிறேன் என்று திட்டம் தீட்ட தொடங்குகிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.