மாரி சீரியலில் பூஜை முடிந்த கையோடு தாராவுக்கு சூர்யா அதிர்ச்சி கொடுக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் காணாமல் போன கலசத்துக்காக விஷம் குடிக்கப் போன மாரிக்கும்,  ரவுடியிடம் இருந்து கலசத்தை சூர்யா கைப்பற்றிய நிலையில், அதை கோயிலில் வைத்து பூஜை செய்யும் போது இருவருக்கும் முதல் மரியாதை செய்யப்படுகிறது.  தனது திட்டம் நிறைவேறாமல் கலசத்துக்கு பூஜை நடப்பதை பார்த்து தாரா கடுப்பாகிறார். இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


கோயிலில்மாரிக்கும் சூர்யாவுக்கும் முதல் மரியாதை அளிக்கப்பட்ட நிலையில் வீட்டில் தேவி போட்டோ முன்பு மாரி கலச பூஜை நன்றாக நடத்தி முடித்து விட்டேன், அதற்கு நீங்கள் தான் காரணம் என்று சொல்கிறாள். இதை கேட்டதும் தாரா சூர்யா மட்டும் சரியான நேரத்திற்கு கலசத்தை கொண்டு வரவில்லை என்றால் கஷ்டம் தான் என்று சொல்லி பேசுகிறார். ஆனால் அனைவரும் மாரியை பாராட்டுகின்றனர்.






அப்போது சூர்யா தாராவை தனியா அழைத்துக்கொண்டு சென்று கலசத்தை திருடியது வேற யாரும் அல்ல சங்கர பாண்டி தான் என்று சொல்கிறார். இதைக் கேட்டு தாரா அதிர்ச்சியாகி சமாளிக்க நினைக்கிறார். உடனே  சூர்யா சங்கர பாண்டியை அடித்து போலீசை வரவழைத்து  பிடித்து கொடுக்கிறான். பின்னர் தாராவிடம் ஸ்ரீஜா மற்றும் அரவிந்த் வந்து  ஏன் சங்கரபாண்டியை பிடித்து கொடுத்தாய் என்று கேள்வியெழுப்புகிறார். அப்படி செய்யவில்லையென்றால் மாரி மேல் அவனுக்கு நம்பிக்கை வந்துவிடும் என் மேல் நம்பிக்கை போய்விடும் என்பதால் தான் நான் சங்கர பாண்டியை போலீசில் பிடித்துக் கொடுத்தேன் என்று தாரா சொல்கிறாள்.


இதனைத் தொடர்ந்து அரவிந்த் சங்கர பாண்டியனை ஜாமீனில் எடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு வருவதற்கு அனைவரும் சம்மதிக்க மாட்டேன் என்று சொல்கிறார். ஆனால் மாரி சங்கர பாண்டியை வீட்டுக்குள் சேர்த்து கொள்ள சொல்ல ஜெகதீஷ் மாரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் தான் இந்த வீட்டுக்குள்ளே அனுப்புவேன் என்று சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.