மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் யமுனாவின் கல்யாணம் நடக்க கார்த்தி அம்மா கண்டிஷன் போடும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். 


நேற்றைய எபிசோடில் கார்த்திக்கிற்கும் யமுனாவிற்கும் நடக்கவிருந்த நிச்சயதார்தத்தை சக்திக்கு நடக்கப்போகிறது என நினைத்து அங்கு வந்து பிரச்சனை செய்யும் வெற்றி தாங்கள் இருவரும் காதலிப்பதாக தெரிவிக்கிறார். இதனால் நிச்சயதார்த்தம் நடக்காது  என சொல்லும் தனது பெற்றோரிடம் கார்த்தி யமுனாவையும் யமுனா குடும்பத்தையும் தவறாக புரிந்து கொண்டு பேசுகிறீர்கள் என சொல்கிறார். இதனையடுத்து  யமுனாவை பிரிக்க கார்த்திக்கின் பெற்றோர் பிளான் போடுகின்றனர். விறுவிறுப்பாக போகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை காணலாம். 






கார்த்திக்கின் தாய் நிச்சயதார்த்தத்தில் கலாட்டா செய்த அந்த ரவுடியின் மேல் போலீசில் புகார் கொடுக்கலாமா என கேட்கிறார்.  அவரது அப்பா வேண்டாம் இப்போதைக்கு இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளிய வருவது என்று பார்க்கலாம் என சொல்கிறார். பின்னர் கார்த்திக்கை சந்திக்க வரும் சக்தி மன்னிப்பு கேட்டு யமுனாவை ஏற்றுக் கொள்ளுங்கள் என சொல்கிறார்.  அதேசமயம் அம்மா அப்பாவும் முக்கியம். அவங்கள கன்வின்ஸ் பண்ணுங்க என சக்தியிடம் கார்த்திக் சொல்கிறான். பின்னர் சக்தி கார்த்திக் அம்மாவின் காலில் விழுந்த மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துகிறாள். 


ஆனால் உங்க அக்கா கல்யாணம் நடக்கணும்னா முதல்ல நீ கல்யாணம் பண்ணனும் இதுதான் என்னோட கண்டிஷன் இந்த கண்டிஷன் படி நடந்தால் யமுனா கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என கார்த்திக்கின் அம்மா சொல்ல சக்தி அதிர்ச்சி அடைகிறாள். தன்னுடைய ஐஏஎஸ் படிப்பை முடிக்க வேண்டும் என யோசித்தபடி கிளம்ப கார்த்தியின் அம்மா சக்திக்கு ஐஏஎஸ் படித்து முடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது அதனால் கல்யாணம் பண்ண மாட்டாள் என சொல்கிறாள்.


பின்னர் வீட்டுக்கு வந்த வெற்றிக்கு யமுனாவின் நிச்சயதார்த்தம் என உண்மை தெரிய வர தவறு செய்து விட்டோம் என வருத்தமாகிறான். மீனாட்சி சக்தியை வெற்றி துரத்தி அவளை கொல்லுவதைப் போல கனவு காண்கிறாள்.