தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தாரா ஏற்பாடு செய்த ரவுடிகள் சாஸ்திரியின் மகன் என்று சொல்லிக்கொண்டு மாரியிடம் குழந்தையைக் கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது மாரி சாஸ்திரியின் மகன் என்று சொன்னதால் குழந்தையைத் தர முடியாது என மறுக்க முடியாமல் தவிக்கிறாள். பிறகு “கொஞ்ச நேரம் குழந்தை என்னுடன் இருக்கட்டும்” என்று சொல்லி ரூமுக்கு கொண்டு போய் குழந்தைக்கு பால் கொடுத்து குழந்தையைக் கொஞ்சி விட்டு அந்த ரவுடிகளிடம் குழந்தையை கொடுக்கிறாள். 


அதைத் தொடர்ந்து தாரா ரவுடிகளை சந்தித்து “இந்தக் குழந்தையை எங்கேயாவது கூட்டிட்டு போய் கொன்னுடுங்க. குழந்தை செத்துப் போச்சு என்ற தகவல் தான் எனக்கு வரணும்” என்று சொல்லி பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கிறாள். 


அடுத்ததாக குழந்தையுடன் வந்த ரவுடிகள் ஒரு பழைய குடோனுக்கு வந்து மேலே இருந்து குழந்தையை கீழே வீசி விடலாம் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால் குழந்தை பாவம் என பரிதாபப்பட்டு அது ஒரு பெட்டிக்குள் வைத்து வீசி விடலாம் என்று முடிவை மாற்றிக் கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து குழந்தையை வீசுவதற்கு தயாராக கீழே ஒரு போலீஸ் வந்து நிற்கிறது. இதைப் பார்த்த ரவுடிகள் அதிர்ச்சி அடைகின்றனர். 


ஜீப்பிலிருந்து போலீசாக இறங்கிய கார்த்திகை தீபம் தீபா “யாருடா நீங்க என்ன பண்றீங்க?” என்று விசாரிக்க “சும்மா தான் நின்னுட்டு விட்டோம்” என்று சமாளிக்க முயற்சி செய்கின்றனர். கையில என்ன பெட்டி என்று கேட்க பழைய துணிகள் என்று சொல்ல பெட்டி அசைவதைப் பார்த்து தீபாவுக்கு சந்தேகம் வருகிறது. 


பெட்டியைத் திறந்து காட்ட சொல்ல ரவுடிகளும் திறக்க, அதில் குழந்தை இருப்பதைப் பார்த்து ஷாக் ஆகிறாள். இதனால் தீபா அந்த ரவுடிகளை அடித்து துரத்தி விட்டு குழந்தையை மீட்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.