Maari Serial Written Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா ஜெகதீஷ் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது மாரி ஜெகதீசன் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவருடைய உயிருக்கு ஆபத்து வருவது போல் விஷன் வந்ததாக சூர்யாவிடம் சொல்ல, அவன் உடனடியாக அப்பாவை இடம் மாற்றியாக வேண்டும் என்று முடிவெடுக்கிறான். பிறகு டூப்ளிகேட் தினேஷ் உடன் சேர்ந்து ஜெகதீஷை கெஸ்ட் ஹவுஸ்க்கு இடம் மாற்றுகின்றனர். மறுபக்கம் தாரா இந்த முறை நேரடியா நானே போய் ஜெகதீஷ் கொலை பண்றேன் என்று சங்கர பாண்டியுடன் கிளம்பி வருகிறாள்.


“அப்பாவைக் கொல்ல வர்றது யாரு என்று இந்த முறை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்” என்று முடிவெடுத்து ஜெகதீஷ் இருந்த இடத்தில் படுத்துக் கொள்கிறான். மாரி இப்பவாவது ஹஸ்பண்ட் சாருக்கு தாராவை பத்தி தெரியட்டும் என்று தேவி அம்மாவிடம் வேண்டுகிறாள். 


பிறகு தாரா காரில் வந்து இறங்க, சங்கரபாண்டி “அப்படியே போய் ஏதாவது பண்ணி மாட்டிக்காத” என்று சொல்லி உனக்கும் உட்பட மொத்தமும் மூடிக்கொள்ளும் வகையில் ஒரு கருப்பு டிரஸ்ஸை எடுத்துக் கொள்கிறான்.  பிறகு தாரா ஜெகதீஷை குத்தப்போக பட்டென எழுந்து கொள்ளும் சூர்யா குத்த வந்தவர் முகத்தை பார்க்க முயற்சி செய்ய, தாராவுக்கும் சூர்யாவுக்கும் இடையே நடக்கும் இந்த பரபரப்பான காட்சியில் தாராவின் கையில் கத்தியால் கீறல் விழுந்து அடிபட்டு விடுகிறது. 
 
இந்த இடத்தில் தாரா சூர்யாவிடமிருந்து தப்பித்து காரை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பிச் செல்கிறார். சூர்யா மாரியிடம் குத்த வந்தவங்க தப்பிச்சுட்டாங்க என்று சொல்ல, மாரி “அவங்க காயத்துக்கு ட்ரீட்மென்ட் எடுக்க ஹாஸ்பிடல் தான் போயிருக்கணும் அங்க போய் பார்க்கலாம்” என்று ஐடியா கொடுக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ (ஸ்பாய்லர் இல்லாமல்)


Aparna Das: 5 ஆண்டு காதல்.. ப்ரொபோசலே வித்தியாசம்.. தீபக் - அபர்ணா தாஸ் காதல் உருவானது இப்படித்தான்!