தீபக் பரம்போல் தன்னிடம் காதலை சொன்ன விதம் வித்தியாசமானதாக இருந்தது என நடிகை அபர்ணா தாஸ் தெரிவித்துள்ளார்.
மஞ்சும்மல் பாய்ஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரலமான நடிகர் தீபக் பரம்பொல் மற்றும் பீஸ்ட், டாடா படங்களில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் ஆகிய இருவரின் திருமணம் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணம் காதல் திருமணமாகும். இவரும் 2019 ஆம் ஆண்டு வெளியான மனோஹரம் என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்தபோது காதலிக்க தொடங்கினர். இதனிடையே தங்களுடைய காதல் கதையை அபர்ணா தாஸ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி காண்போம்.
வடக்கஞ்சேரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தான் தீபக்கை நான் முதன் முதலில் பார்த்தேன். சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்ற இடத்தில் என்னை பார்த்து வணக்கம் சொன்னார். அந்த குணம் என்னை கவர்ந்தது. இதற்கிடையில் மனோகரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு இருவரும் சந்தித்தோம். ஆனால் அப்போது என்னை தெரியாது என தீபக் பரம்போல் கூறிவிட்டார். அந்த இடத்தில் தொடங்கிய நட்பு தான் காதலாக மாறியது. மனோகரம் படத்துக்கு தீபக் தான் தன்னை பரிந்துரை செய்தார். அவர் தான் என்னிடம் காதலை சொன்னார். அந்த அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது.
அதாவது என்னுடைய வங்கி இருப்பு இவ்வளவு தான் உள்ளது. நான் சீக்கிரம் கோபப்படுவேன். படம் இல்லாவிட்டால் நாம் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். ஆனால் நான் இருக்கும்வரை உன்னை நன்றாக பார்த்துக்கொள்வேன். உன்னை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த வார்த்தையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தீபக் காதலை சொன்ன அதே நாளில் நானும் ஓகே சொல்லி விட்டேன். என்னை வீட்டில் பேச சொன்னார். நான் அவரிடம் நாம் திருமணம் செய்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என சொன்னேன். எங்களுடைய காதல் பற்றி குடும்பத்தினருக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் தெரியும். ஒரு வருடத்துக்கு முன்பே திருமணம் செய்ய முடிவெடுத்தோம்.
என்னுடைய குடும்பம் மஸ்கட்டில் இருக்கும் நிலையில் இருவரும் அங்கு சென்றோம். அதுமட்டுமல்லாமல் திருமணத்துக்கு முன்பு பாலி மற்றும் மாலத்தீவுகளுக்கு ஒன்றாக சென்றோம். ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து பயணம் செல்கிறோம் என்ற தகவல் வெளிவராமல் பார்த்துக் கொண்டோம். ஒருமுறை எங்களுடைய பயண போட்டோக்களை வைத்து நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதாக யூட்யூபர் ஒருவர் வீடியோ வெளியிட்டார். நல்லவேளை யாரும் அதை கவனிக்கவே இல்லை என அபர்ணா தாஸ் கூறியுள்ளார்.