மாரி சீரியலில் சூர்யாவுக்கும் ஜாஸ்மினுக்கும் திருமணம் செய்ய வேண்டாம் என மாரி முடிவு செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நேற்றைய எபிசோடில் சூர்யாவுக்கு தன் அம்மாவுக்கு யாரோ விஷம் வைத்து கொன்றது தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அம்மா படத்திற்கு விளக்கேற்றும் சூர்யாவை கண்டு தாரா கடுப்பாகிறார். இது நல்லதுக்கு இல்லை என நினைத்துக் கொள்கிறார்.
இன்றைய எபிசோடில் சூர்யா விளக்கேற்றியதை தூரத்தில் இருந்து அவரது அம்மா தேவி பார்த்து ரசிக்க மாரி சந்தோஷப்படுகிறாள். மறுநாள் காலையில் மாரி வேலை பார்த்துக் கொண்டிருக்க தேவி அவர் முன் தோன்றி சூர்யா செயலால் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறாள். அதேசமயம் நீ ஏன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாய்? அந்த ஜாஸ்மினை தயவு செய்து திருமணம் பண்ண விடாதே... தடுத்து நிறுத்து என்று சொல்கிறார்.
சரி என்று சொல்லிக் கொண்டிருக்க அப்போது ராசாத்தியின் குழந்தை, தாய் மாமா வருகிறார்கள். அவர்களை ஹாசினி வரவேற்று ஹாலில் அமர சொல்லி விட்டு மாரியிடம் இருவரும் வந்த விஷயத்தை சொல்கிறாள். உடனே மாரி ஹாலுக்கு வர அப்போது அந்த குழந்தை ஜாஸ்மினை பார்த்து அதிர்ச்சியாகிறது. அதனைப் பார்க்கும் மாரி என்னவென்று கேட்க, இந்த பெண் தான் தன் அம்மாவின் கொலைக்கு காரணம் என்று சொல்ல மாரி அதிர்ச்சியாகிறாள்.
இதன் பின்னர் அனைவரும் முன்னால் மாரி இந்த திருமணம் வேண்டாம் சூர்யாவுக்கும் ஜாஸ்மினுக்கும் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்கிறார். ஏன் எதற்கு என்று கேட்க தேவி அம்மா சொன்னாங்க என்று சொல்ல, தாரா இவள் பொய் சொல்கிறாள். தேவியம்மா எல்லாம் வந்து சொல்ல மாட்டார்கள் என குற்றம் சாட்டுகிறார்.
ஆனால் மாரி நான் சொல்வது உண்மை என்று சொல்ல, அப்ப அந்த தேவி அம்மாவை நேரில் வந்து சொல்ல சொல்லு என்று தாரா கூறுகிறார். சரி இப்ப அந்த தேவியம்மா நேர்ல வந்தாங்கன்னா உங்களுக்கு ஓகேவா என்று கேட்க, அப்படி வரவில்லை என்றால் நீ என்ன பண்ணுவ என்று தாரா திரும்ப கேட்கிறார். அவங்க வரலைன்னா நான் இந்த வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என மாரி சபதம் போடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.