அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் குலதெய்வ கோயிலுக்கு அழைக்காத சிதம்பரத்துக்கு அமுதா பதிலடி கொடுக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல்


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். 


தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி, பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது. 






அமுதா எடுத்த முடிவு 


முன்னதாக அமுதாவுக்கு அவசரமாக ரூ.50 ஆயிரம் தேவைப்பட மகளிர் குழுவில் கடன் கேட்கிறார். ஆனால் அங்கு இருக்கும் உமா தர மறுக்கிறார். பின்னர் வட்டிக்கடைக்கு சென்று பணம் கேட்கும் நிலையில் கடை ஓனர் சிதம்பரத்துக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார். இதனால் அங்கு வரும் சிதம்பரம் அமுதாவிடம் சண்டைக்கு செல்கிறார். ஆனால் நான் ஒன்னும் உங்க பேரை சொல்லி பணம் வாங்கல..அப்படிப்பட்ட பணமும் எனக்கு தேவையில்லை என சொல்லி கோபமாக போகிறார். 


இன்றைய எபிசோடில் சிதம்பரம் உமாவை குலதெய்வ கோயிலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். இதனால் உமா அமுதாவை சிதம்பரம் அழைக்காதது குறித்து கிண்டலாக பேசுகிறாள். இதுபற்றி அமுதா வீட்டில் வந்து அன்னலட்சுமியிடம் வருந்துகிறாள். மேலும் நான் பிறந்ததிலிருந்து எந்த வருஷமும் குலதெய்வ கோயிலுக்கு போகாமல் இருந்ததில்லை.


ஒரே ஒரு வருஷம் மட்டும் நாங்க போகலை.அந்த வருஷம் அம்மா இறந்துட்டாங்க, அதுக்கப்புறம் இந்த வருஷம் அப்புச்சி என்னை கூப்பிடலை என சொல்கிறாள். இதனைப் பார்க்கும் அன்னலட்சுமி அமுதாவிடம் யாரு கூப்பிட்டாலும் கூப்பிடலேன்னாலும் கோவிலுக்கு போறதுக்கு யாரும் நம்மளை அழைக்கணும்ன்னு அவசியம் இல்ல.. நீ போ என சொல்கிறாள்.


இதனையடுத்து கோவிலில் அமுதாவை பார்த்த நாகு, அவளை நீ இங்க வர்றதுக்கு உனக்கு தகுதியே கிடையாது என சொல்ல, அமுதா என்ன தகுதி வேணும் என கேட்கிறார். கல்யாணம் ஆன பொண்ணு குலதெய்வக் கோயிலுக்கு புருஷன் இல்லாம வர்றதே தகுதி குறைச்சல் தான் என சொல்ல, அமுதா தலைகுனிந்து நிற்கிறார். அப்போது யார் சொன்னா அமுதா தனியா வந்துருக்கான்னு என குரல் கேட்க, அனைவரும் திரும்பி பார்க்க செந்தில், அன்னலட்சுமி குடும்பத்தினர் அங்கு வருகின்றனர்.


இதனை தொடர்ந்து செந்தில் அனைவரின் முன்பும் அமுதாவின் தோளின் மீது கையைப் போட்டு உள்ளே அழைத்து செல்லும் நிலையில், கோயிலின் உள்ளே சிதம்பரம் உமா குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது இதனைப் பார்க்கிறார். உடனே அமுதாவிடம்  சிதம்பரம் நீ எதுக்கு இங்க வந்த உன்னை யாரு கூப்பிட்டது, வெளில போ என மிரட்டுகிறார்.


ஆனால் எதையும் காதில் வாங்காமல் கணவன், மனைவியாக அமுதாவும் செந்திலும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி விளக்கேற்றும் சடங்கு நடக்கிறது. அதே போல் உமாவும், பழனியும் விளக்கேற்ற அமுதாவும், உமாவும் 11 அகல் விளக்கு ஏற்றி விளக்கு அணையாமல் பிரகாரத்தை சுற்றி வரும் பரிகாரம் நடக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.