மாரி சீரியலில் மாரிக்கு எதிராக ஶ்ரீஜா சூழ்ச்சி செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறவுள்ளது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் ஹாசினி போட்ட நாடகத்தால் மாரியை ஃபங்ஷனுக்கு சூர்யா கூட்டிச் செல்ல தாரா சம்மதம் சொல்கிறார்.
ஹாசினி நீங்களே வந்து சூர்யாவிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்ல, தாரா நீ மாரியை அழைத்து போ என்று சொல்ல சூர்யா சந்தோஷப்படுகிறான். உடனே ஹாசினி மாரியை அழைத்து சென்று ரூமில் அழகாக ஃபங்ஷனுக்கு ரெடி செய்கிறாள்.
கீழே அனைவரும் காத்திருக்கும் நிலையில் மாரி புது டிரஸ் போட்டுக்கொண்டு மாடர்னாக வருவதை கண்டு சூர்யா உட்பட அனைவரும் பார்த்து மாரியா இப்படி மாறிட்டா என்று வியக்கின்றனர். இதனையடுத்து சூர்யா தாராவிடம் வந்து ரொம்ப நன்றி. நீங்க மாரி அழைத்து போக சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்ல தாரா அதிர்ச்சியடைகிறாள்.
ஹாசினி தன்னை ஏமாற்றி விட்டார் என்பது தெரிந்து கொண்டு கோபத்தில் தாரா அவரை தேட ஹாசினி ஒளிந்து கொள்கிறாள். இதற்கிடையில் ஸ்ரீஜா வேகவேகமாக சூர்யா ரூமுக்கு சென்று அவர் எடுத்து வைத்திருந்த ஜிமிக்கி விஷயத்தை சொல்ல தாரா ஷாக்காகி அந்த ஜிமிக்கியை தூக்கி வீசுகிறார். அது சங்கர பாண்டி மீது பட அவர் என்னவென்று எடுத்து பார்க்கிறார்.
நகை என தெரிந்த பிறகு அதிர்ச்சியடையும் அவர் இந்த நகை நமக்கு வேண்டாம் என தூக்கி வீச அது மாரி,சூர்யா இருவரும் ஃபங்ஷனுக்கு போகும் காரில் பின்புற சீட்டில் வந்து விழுகிறது. போகும் வழியில் மாரிக்கு தாகம் எடுக்க காரை நிறுத்தி தண்ணீர் வாங்க சூர்யா செல்கிறார். அப்போது ஒரு பெண்ணின் அழுகை சத்தம் கேட்பது போல் இருக்க, மாரி இறங்கி எங்கே சத்தம் வந்தது என்று போய் பார்க்கிறார். அங்கிருந்த மரத்தின் அடியில் தலையில் மல்லி பூ வைத்திருக்கும் ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறாள்.
அந்த பெண்ணிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்க, நான் இறந்து விட்டேன் என்னை பூவாசத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள் என்று சொல்ல மாரி அதிர்ச்சியடைகிறார். உடனே பூவாசத்தில் யாராவது சாவார்களா என்று மாரி கேட்க, ஆமாம். மல்லிப்பூவில் விஷம் வைத்து என்னை கொன்று விட்டார்கள். உன் கணவனுக்கும் ஆபத்து உள்ளதால் ஜாக்கிரதையாக இரு என்று அந்த பெண் சொல்கிறாள்.
இதற்கிடையில் மாரியை தேடி வரும் சூர்யா காரில் அவர் இல்லாததை கண்டு அருகில் தேடிப் பார்க்கிறார். அப்போது மாரி தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்து என்ன இங்க வந்து நிக்குற என சூர்யா கேட்கிறார். உடனே அங்கே ஒரு பெண் என்று மாரி திரும்பி பார்க்க இடத்தில் அப்பெண் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். பின்னர் ஃபங்ஷனுக்கு நேரமாச்சு வா என்று சூர்யா சொல்லி அழைத்து செல்லும் நிலையில் அந்தப் பெண் சொன்னதை மாரி நினைத்துக் கொண்டிருப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.