அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் அமுதாவை அவமானப்படுத்த வடிவேலு சூழ்ச்சி செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல் 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.


தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.  


முன்னதாக நேற்றைய எபிசோடில் செந்திலை கல்லூரியில் சேர்க்கக்கோரி அமுதா முயற்சி செய்து அதில் வெற்றி பெறும் காட்சிகள் இடம் பெற்றது. இன்றைய எபிசோடில் அமுதா வீட்டுக்கு வந்ததும் சின்னா மற்றும் பரமுவை உள்ளே அழைத்து இந்த வீட்டுக்கு வந்த பிறகு நீங்களும் என்னோட சேர்ந்து வேலை செய்யனும் என சொல்கிறாள். இதற்கு வடிவேலு, சின்னா, பரமு எதிர்ப்பு தெரிவித்து கோபத்தில் வெளியே செல்கின்றனர்.






இதனையடுத்து பரமு, சின்னா, வடிவேலு ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்க அன்னலட்சுமியும் புவனாவும் சென்று அவர்களை சந்தித்து மன்னிப்பு கேட்கிறார்கள். இதற்கு வடிவேலு நீ எதுக்கும்மா மன்னிப்பு கேக்குற, உன் மருமகளை வந்து ஊர் முன்னாடி எங்க கிட்ட கால்ல விழுந்து மன்னிப்பு கேக்க சொல் என கோபமாக தெரிவிக்கிறார். அங்கிருந்து வீட்டிற்கு வரும் அன்னலட்சுமி அமுதாவிடம் இதை எப்படி சொல்வது என தயங்க அமுதா என்ன நடந்துச்சு என கேட்கிறார்.


ஆனால் அவங்க 3 பேரும் அங்கயே இருக்கட்டும் என அன்னலட்சுமி சொல்லாமல் மழுப்ப, அமுதா மீண்டும் மீண்டும் கேட்கிறாள்.  உடனே அன்னம் தயக்கத்துடன் உன்னை ஊர் முன்னாடி கால்ல விழுந்து மன்னிப்பு கேக்க சொல்றாங்கம்மா என கூறுகிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் அமுதா நான் வந்த உடனே இந்த குடும்பத்தை பிரிச்சிட்டேன்னு ஊர் சொல்வாங்க. அதனால நான் மன்னிப்பு கேட்கிறேன் என முடிவெடுக்கிறார். 


இதை சற்றும் எதிர்பாராத அன்னலட்சுமி வேண்டாம். வடிவேலும் என் மகளும் திமிருக்கு பண்றாங்க. எங்க குடும்பத்துக்காக நீ எவ்வளவோ கஷ்டபட்டுட்ட, இதுக்கு மேலயும் நீ அவமானப்படுறதை என்னால பார்க்க முடியாதும்மா என சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.