தமிழ் சின்னத்திரையில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாட்டி கொடுத்த வயகரா மாத்திரையால் அருண், ஆனந்த், அருணாச்சலம் ஆகியோர் தவித்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் . 


அதாவது எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போது செல்வி பாட்டி மோதிரத்தை கழட்டி வைத்து விட்டு சாப்பிட அந்த மோதிரம் காணாமல் போகிறது. பாட்டி பதற கார்த்திக் பயப்படாதீங்க மோதிரம் எங்கயும் போயிருக்காது என்று சொல்லி கூல் செய்கிறான். பிறகு அந்த மோதிரத்தை எடுத்தது வெயிட்டர் தான் என்று கண்டு பிடிக்கிறான். 


அந்த வெயிட்டர் மோதிரத்தை அடகு வைக்க, கார்த்திக் அவனை மிரட்டி மோதிரத்தை வாங்கி திருடிய வெயிட்டருக்கு அறிவுரை சொல்லி பணம் கொடுத்து வருகிறான். அடுத்ததாக கார்த்திக் இந்த ரெஸ்ட்டாரெண்டை வாங்கிடலாம். ஆனால் வீட்டு மருமகள்கள் பெயரில் வாங்கலாம் என்று சொல்ல, அருண் நான் ஐஸ்வர்யா பெயரில் வாங்கலாம் என்று இருந்ததாக சொல்ல, ஆனந்த் ஏன் மீனாட்சி பெயரில் வாங்கலாம் என்று சொல்ல, செல்வி பாட்டி படகு போட்டி வைக்கலாம் அதில் வெற்றி பெறுபவரின் மனைவி பெயரில் வாங்கலாம் என்று சொல்ல மூன்று பேரும் ஒப்பு கொள்கின்றனர்.


கார்த்திக் நான் இந்தப் போட்டியில் ஜெயித்தால் மூன்று மருமகள்கள் பெயரில் வாங்க வேண்டும் என்று சொல்ல போட்டி தொடங்குகிறது. இந்த சமயத்தில் தீபாவுக்கு போன் செய்யும் சிதம்பரம் “உடனடியா நீ வந்து பாடியாகணும். அப்படி வரலைனா கார்த்திக் உயிரோட இருக்க முடியாது. படகில் அவன் கூட போறது என்னுடைய ஆள்” என்று மிரட்ட தீபா அதிர்ச்சி அடைகிறாள். 


போட்டி நடக்கும் இந்த கேப்பில் சிதம்பரத்தின் ஸ்டூடியோவுக்கு சென்று பாடி கொடுத்து விட்டு வருகிறாள். போட்டியில் கார்த்தியும் ஜெயிக்க அருணாச்சலம் இப்போதைக்கு ரெஸ்டாரண்ட் வாங்க வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். இப்படியான நிலையில் இந்த வார கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Vijay Sethupathi: அழகை மட்டும் வைத்து நிலைத்து நிற்க முடியாது: கத்ரீனாவை வெட்கப்பட வைத்த விஜய் சேதுபதி


Toxic: சாய் பல்லவிக்கு பதிலா இவரா.. யஷ் உடன் டாக்ஸிக் படத்தில் இணையும் பாலிவுட் பிரபலம்.. குழப்பத்தில் ரசிகர்கள்!