தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியிலே மிகவும் முக்கியமான தொடர் கார்த்திகை தீபம் ஆகும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
கார்த்திகை தீபம்:
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தனது மாமா ராஜராஜனை அழைத்து வருவதாக வாக்கு கொடுக்க, தாத்தா சாமுண்டேஸ்வரி குடும்பத்தை பற்றி சொல்ல தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது, சாமுண்டேஸ்வரியின் கடைசி மகள் ஸ்வேதா பற்றி சொல்ல அப்படியே இந்த பக்கம் ஸ்வேதா திருவிழாவில் பாட்டு பாட சாமுண்டேஸ்வரி "இது தன்னுடைய மகளின் குரல் மாதிரி இருக்கே.. அவளை பாட கூடாதுனு தானே சொல்லி இருக்கேன்" என்று சந்தேகப்பட்டு பாடுவது யார்? என பார்க்கிறாள்.
சாமுண்டீஸ்வரியின் ஆள் யார்?
கார்த்திக் எல்லாரை பத்தியும் சொன்னீங்க ஒரு பொண்ணை பத்தி மட்டும் சொல்லலையே என்று கேட்க அவ தான் அந்த வீட்டிலேயே தங்கமான பொண்ணு, அவங்க அம்மாவுக்கு அப்படியே எதிரானவள். நல்ல குணம் கொண்டவள் என சொல்கிறாள்.
இதையடுத்து ஹீரோயின் ரேவதியின் அறிமுக காட்சிகள் இடம் பெறுகின்றன. அடுத்ததாக கோவில் போட்டியில் சாமுண்டேஸ்வரியின் சார்பாக ஒரு ஆளும், அவளை எதிர்க்கும் சிவணாண்டியின் ஆள் ஒருவரும் சிலம்பாட்டத்தில் மோதி கொள்ள உள்ள நிலையில் சாமுண்டேஸ்வரியின் ஆள் காணாமல் போகிறான். இதனால், சாமுண்டீஸ்வரியின் ஆளாக கார்த்திக் இன்றைய எபிசோடில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.