தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் அருண் என இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக அபிராமி சத்தம் போட்டு சண்டையை நிறுத்தி ரூமுக்கு அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, ஐஸ்வர்யா மாயாவுக்கு போன் செய்து “நீங்க சொன்ன மாதிரியே இந்த பிரச்சனையில் அருண் எனக்கு சப்போர்ட்டா பேசுனாரு, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு” என நன்றி கூறி போனை வைக்கிறாள். இதனையடுத்து கார்த்திக் தீபாவுக்காக விழா நடத்த உள்ள நிலையில், அதற்கான போஸ்டரை வீட்டுக்கு எடுத்து வந்து தீபாவிடம் காட்டுகிறான். 


இதைப் பார்த்த தீபா, “பல்லவி என்ற பெயருக்கு பதிலா தீபா கார்த்திக் என்று பெயர் இருக்கட்டும், இதுக்கு காரணமாக இருந்தது நீங்க தான்” என்று சொல்ல, கார்த்திக்கும் தீபாவின் ஆசைப்படியே பெயரை போடுவதாக சொல்கிறான். மறுநாள் அபிராமி, தர்மலிங்கம் வீட்டு வாசல் உட்பட எல்லா இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 


இதைப் பார்த்து கடுப்பாகும் ஐஸ்வர்யா, இதைத் தடுக்க ஏதாவது செய்யணும் என்று பிளான் போடுகிறாள்.


கார்த்திக் தர்மலிங்கத்திற்கு போன் செய்து வெளியே வந்து பார்க்க சொல்ல, அவர்களும் போஸ்டரை பார்த்து சந்தோசப்படுகின்றனர். “இதுக்காக தான் இவ்வளவு நாளா காத்திட்டு இருந்தேன், அது இன்னைக்கு உங்களால் நடந்திருக்கு மாப்பிள்ளை” என்று ஆனந்தக் கண்ணீர் விடுகிறார். 


தீபாவும் இங்கே போஸ்டரை பார்த்து சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.


ALSO READ | Lal Salaam Review: ரஜினிகாந்தின் மாஸ் கேமியோ! ஐஸ்வர்யா இயக்கம் எப்படி? “லால் சலாம்” திரைப்பட விமர்சனம்!