சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


”சபதத்துல நீ ஜெயிச்சிட்டன்றத சொல்லிக்காட்ட தான் இப்படியெல்லாம் பண்ணனு எனக்கு தெரியும்” என்று விஜயா மீனாவிடம் சொல்கிறார். “ஏதோ கொஞ்சமா தங்கம் வாங்கிக் கொடுத்து இருக்கான், சீக்கிரமே அவன் இன்னொரு முகத்தை காட்டுவான் அப்போ உனக்குத் தெரியும். கனவு கண்டுகிட்டு இருக்காம சீக்கிரம் வேலையை முடி” என்கிறார் விஜயா. முத்து கோயிலில் தாலி கட்டியபோது எடுத்து புகைப்படத்தை எடுத்து வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டுகிறார். 


“நீங்க என்ன ராஜா, ராணியா? உங்களுக்கு கல்யாணம் ஆன வரலாறை அப்டியே ஃபோட்டோ எடுத்து வச்சி இருக்கீங்களா?” என்று கலாய்க்கிறார் விஜயா. அதற்கு முத்து ”வீட்டை விட்டு பணத்தைத் தூக்கிட்டு ஓடுறது, திருட்டுக் கல்யாணம் பண்ணிகிட்டு வர்ரது, இதானே உங்களுக்கு பெரிய விஷயம்” என்கிறார் முத்து.  முத்துவின் கல்யாண போட்டோவை வீட்டு ஹாலில் மாட்ட விஜயாவிற்கு விருப்பம் இல்லை. இதனால் முத்து வீட்டு ஹாலில் பெரிய சைஸில் போட்டோ மாட்டப் போறேன்” என்று கூறி வெறுப்பேற்றுகிறார்.  


மனோஜ் தூக்கத்தில் மசால் தோசை, இட்லி, ராவா, தோசை, ஆனியன் தோசை, கிச்சடி, பொங்கல், பூரி என உளறுகிறார். ரோகிணி அவரை எழுப்புகிறார். “நான் தூங்கல சார்” என்று அலறி எழுகிறார் மனோஜ். ஹோட்டல் வெய்யிடர் மாதிரி காத்திக்கிட்டு இருந்த என்கிறார் ரோகிணி. அதற்கு மனோஜ் “நான் வெயிட்டரா?” என்கிறார். ரோகிணி, ஆமா “நீ தான் தோசை, மசால் தோசை என்று ரிப்பீட்டடா சொல்லிக்கிட்டே இருந்த” என்கிறார். “ஏன் அப்படி சொல்லிக்கிட்டு இருக்க?” எனக் கேட்கிறார் ரோகிணி.


மசால் தோசை சாப்பிட ஆசைப்பட்டதால் தோசை கனவில் வந்ததாக சொல்லி சமாளிக்குறார் மனோஜ். ஆனால் ரோகிணி அதை நம்பவில்லை. பின் சிரித்துக் கொண்டே “சில ஆம்பளைங்க கனவுல சினிமா ஹீரோயின் எல்லாம் வருவாங்கனு சொல்லுவாங்க, நீ என்னடானா தோசை வருதுனு சொல்ற” என சொல்கிறார். பின் இருவரும் அடித்து விளையாடுகின்றனர். இதனையடுத்து விஜயா தூங்கி கொண்டிருக்கும் அண்ணாமலையை எழுப்பி ”என்னங்க முதல்ல அங்க சிரிப்பு சத்தம் கேட்டுச்சி, அப்றம் இங்க கேட்டுச்சி, இப்போ மனோஜ் ரூம்லயும் கேட்குது. நடு ராத்திரியில என்னங்க சிரிப்பு வேண்டிக் கிடக்கு” என்கிறார் விஜயா.


அதற்கு அண்ணாமலை ”எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க, இதுல உனக்கு என்ன பிரச்சனை” என்கிறார். ரோகிணி மனோஜிக்கு மசால் தோசை வாங்கி வந்து வைத்திருக்கிறார். வீட்டில் சமைக்காததால் ஹோட்டலில் இருந்து மசால் தோசை வாங்கி வந்து வைத்திருப்பதாக நினைத்து அதை முத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ரோகிணி எனக்காக வாங்கிட்டு வந்த மசால் தோசையை முத்து எடுத்து சாப்பிடுகிறான் என்று மனோஜ், அண்ணாமலையிடம் கம்ளைண்ட் செய்கிறார். பின் விஜயா, ரவி அனைவரும் முத்துவை கேள்வி கேட்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.