தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவின் கச்சேரி குறித்து தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்ட, அதைப் பார்த்து தர்மலிங்கம் ஆனந்தக் கண்ணீர் விட்டு நன்றி கூறிய நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, போஸ்டரை பார்த்து கடுப்பாகும் ரூபாஸ்ரீ இந்த தீபாவை பாடவே விட கூடாது என முடிவு செய்து நேராக போலீசை கூப்பிட்டுக் கொண்டு “இவர்கள் பொண்ணை பாட வைப்பதாக சொல்லி 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கி இருக்காங்க, அதைக் கொடுத்தா தான் கச்சேரி நடக்கணும்” என்று சொல்ல, இவர்கள் எதிர்பாராத ட்விஸ்ட்டாக தர்மலிங்கம் 10 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து “இவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தாச்சு, அதை வாங்கிட்டோம்னு எழுதி கொடுக்க சொல்லுங்க” என்று செக்மேட் வைக்க, போலீஸ் இருப்பதால் வேறு வழியின்று எழுதி கொடுத்து விட்டு வெளியேறுகின்றனர். 


அடுத்து தீபா பணம் எப்படி வந்தது என்று கேட்க, கார்த்திக் “மாப்ள தான் இப்படியெல்லாம் பிரச்சனை நடக்க வாய்ப்பிருக்குனு சொல்லி பணத்தைக் கொடுத்தாரு” என்று சொல்கிறான். அடுத்ததாக இங்கே எல்லாரும் சாப்பிட உட்கார, தீபா பரிமாற, அபிராமிக்கு சாப்பாடு வைக்கப் போகும்போது “அவள் நானே பரிமாறிக்கிறேன்” என்று சொல்கிறாள். தீபாவுக்கு கல்யாண வீட்டில் வைத்து அபிராமி சொன்ன வாரத்தை நினைவுக்கு வருகிறது. 


பிறகு திடீரென ஐஸ்வர்யா வாந்தி எடுத்து மயங்கி விழ, டாக்டர் வந்து பரிசோதனை செய்து விட்டு மூன்று மாதம் கர்ப்பம் என்று சொல்ல எல்லாரும் சந்தோசப்படுகின்றனர், இந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க, அபிராமி நீங்க வந்த நேரம் என்று ஐஸ்வர்யா கர்ப்பம் என்று சொல்லி சந்தோசப்படுகிறார். 


இதனையடுத்து ஐஸ்வர்யாவும் அவளது அம்மாவும் பேசும்போது இது அனைத்தும் டிராமா என்பது தெரிய வருகிறது. அடுத்து கார்த்திக்கும் தீபாவும் ரூமுக்குள் இருக்கும்போது கார்த்திக் “நீ பாடுறதுல மட்டும் கவனத்தை செலுத்துங்க” என்று சொல்ல, தீபா ஒரு காதல் பாடலை கார்த்திக்குக்காக பாட, இந்த நேரத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் அபிராமி டிஸ்டர்ப் ஆக, ஐஸ்வர்யா இதையே சாக்காக வைத்து ஏற்றி விடுகிறாள். அதே போல் தீபாவுக்காக கார்த்திக் பணம் கொடுத்த விஷயத்தையும் சொல்லி ஏற்றி விடுகிறாள். 


அதன் பிறகு தீபா “பாடக் கூடாது, எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்” என்று ஐஸ்வர்யா, மாயா மற்றும் ரூபாஸ்ரீ ஆகியோர் கூட்டு சேர்ந்து பேச, ஸ்ரீஜா ஒரு பிளானை சொல்ல, மாயா செம பிளான் என்று கூறுகிறாள். இப்படியான நிலையில் இந்த வார கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.