Karthigai Deepam Serial: 'அக்கா சந்தோஷமாவே இருக்கக்கூடாது' சாமுண்டீஸ்வரியை பழிவாங்கத் துடிக்கும் சந்திரகலா!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி சிவனாண்டி வீட்டிற்கு சென்று ரேவதிக்கு நிச்சயதார்த்தம் நடக்க உள்ள விஷயத்தை சொல்லி, வெறுப்பேற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

சேலை செலக்ட் செய்த கார்த்திக்:

அதாவது, சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு கடைக்காரர் புடவை கொண்டு வந்திருக்க ரேவதிக்காக ஆளாளுக்கு ஒவ்வொரு புடவையை தேர்வு செய்து சொல்ல, அது எதுவும் செட்டாகாத நிலையில் கார்த்திக் ஒரு புடவையை தேர்வு செய்து கொடுக்கிறான். 

ரேவதி அந்த புடவையை கட்டி கொண்டு வர எல்லாரும் அசந்து போய் கார்த்தியின் செலக்ஷனை பாராட்டுகின்றனர். அதை தொடர்ந்து எல்லாரும் கார்த்தியை புடவை செலக்ட் செய்து தர சொல்லி புடவை எடுக்கின்றனர். 

அக்காவை பழிவாங்கத் துடிக்கும் தங்கை:

புடவை எடுத்து முடித்ததும் மொத்த பேரும் கிளம்பி நகை எடுக்க நகை கடைக்கு வருகின்றனர். மோதிரம் செலக்ட் செய்யும் போது கார்த்திக் ஜோடியாக (Couple) ரிங் எடுக்கலாம் என்று ஐடியா கொடுக்க, அதே போல் ரிங்கை தேர்வு செய்கின்றனர். மாப்பிள்ளை மகேஷின் அளவு தெரியததால் கார்த்தியின் விரல் அளவை வைத்து ரிங்கை எடுக்கின்றனர். 

மறுபக்கம், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து. "என் அக்கா சந்தோசமாக இருக்க கூடாது. இந்த நிச்சயம் நல்லபடியா நடக்கக்கூடாது" என்று சொல்கிறாள். சிவனாண்டி "உனக்கு ஏன் என்னை பிடிக்கும்?" என்று கேட்க சந்திரகலா "எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அதனால் தான் என் அக்காவை பழி வாங்கணும்னு நினைக்கிறேன்" என்று சொல்கிறாள். 

மகேசை எச்சரிக்கும் மாயா:

அடுத்து ரேவதி மகேஷ்க்கு போன் செய்து கல்யாண வேலைகள் நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாக சொல்ல, மகேஷ் மாயாவிடம் சிலிமிஷம் செய்து கொண்டே ரேவதியிடம் அப்பாவி போல் "அம்மா அம்மா" என்று சொல்லி பேசுகிறான். "ரேவதி நமக்கு கல்யாணம் ஆக போகுது.. இன்னும் எதுக்கு இப்படி பேசுறீங்க? பேரை சொல்லியே கூப்பிடுங்க" என்று சொல்ல மகேஷ் சரிங்க ரேவதி என்று சொல்லி போனை வைக்கிறான். 

பிறகு இங்கே "மாயா இனிமே தான் நீ உஷாரா இருக்கனும்.. நம்மள பத்தி வெளியே ஏதாவது தெரிந்தா எல்லாம் கெட்டு போய்டும்" என்று எச்சரிக்கிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola