‘மோகினி ஆட்டம் ஆரம்பம்’
கலர்ஸ் தமிழ் தொடரில் விறுவிறுப்பான மர்ம தொடராக ஒளிபரப்பாகி வரும் தொடர் மோகினி ஆட்டம் ஆரம்பம். தற்போது இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு வரும் வெள்ளியன்று இந்த தொடரின் இறுதி எபிசோட் இரவு 8.30 மணிக்கு இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஷலாகாவிடம் சிக்கும் மோகன்!
ஷலாகா மோகனின் மனதில் சந்தேகத்தின் விதைகளை புத்திசாலித்தனமாக விதைக்கிறாள், அதாவது நிஷாந்தி தொடர்ந்து சூனியம் செய்கிறாள என்று நம்ப வைக்கிறாள். தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க ரச்சனாவின் காயத்தைக் குணப்படுத்த முயல்கிறாள். அப்போது நிஷாந்தியிடம் மகா அசுரன் ஒரு ஒப்பந்தத்தை வைக்கிறார். ஷலாகாவை கண்டு தியா மீண்டும் வந்ததாக நம்புகின்றனர் மோகனின் குடும்பம். ஆனால் உண்மையை அறியும் நிஷாந்தி ஷலாகவிடம் மோதுகிறாள்.
ஒரு சூனிய அடிமைச் சந்தையில் மகா அசுரன் அவளையும் அவளது சக்திகளையும் ஏலம் விட முடிவு செய்ததால், நிஷாந்தி தன்னை ஒரு இக்கட்டான நிலையில் காண்கிறாள். மகா அசுரரின் கைதியாக அடிமைச் சந்தையில் நிஷாந்தி பெரும் துன்பங்களைத் தாங்குகிறாள். ஆனாலும், அவளை விடுவிக்க மோகன் வருவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள்.
குழப்பங்களுக்கு மத்தியில், மோகன் உறுதியான இதயத்துடன் சந்தையில் நுழைகிறான், நிஷாந்தியை சிறைப்பிடித்து வைத்திருக்கும் அரக்கனை தாக்குகிறான். மோகன் அவளது சுதந்திரத்தைப் பெற கடுமையாகப் போரிடும்போது போர் தீவிரமடைகிறது. இதற்கிடையில், பதினைந்து ஆபரணங்களை அடைந்த ஷலாகா பதினாறாவது ஆபரணத்தை அடைய, மோகனை குறிவைத்து, அவனது உயிரைப் பறிக்க முயலும்போது, ஷலாகாவின் கெட்ட திட்டங்கள் ஒரு கொடிய திருப்பத்தை எடுக்கின்றன.
ஷலாகாவின் தாக்குதலை முறியடிக்க தியாவும் நிஷாந்தியும் இணைந்து மோகனை அவளது கொடிய மாயையிலிருந்து விடுவிக்க முயல்கின்றனர். இருளை எதிர்கொண்டு, சமநிலையை மீட்டெடுக்கவும், தீய பிடியிலிருந்து ஒருவரையொருவர் காப்பாற்றவும் முயற்சிப்பதன் மூலம் அவர்களின் ஒற்றுமையும் தைரியமும் கொண்டு மோகனை காப்பாற்றுவார்களா?
இன்னும் பல விறுவிருப்பன திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி 'மோகினி ஆட்டம் ஆரம்பம்' தொடரை கலர்ஸ் தமிழில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும், மற்றும் வரும் வெள்ளியன்று இரண்டு மணி நேர சிறப்பு ஒளிபரப்பை இரவு 8.30 மணிக்கு காணாதவறாதீர்கள்.