தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் கார்த்தி குருமூர்த்தியை பிடித்து சிலையை மீட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

சிலையுடன் வந்த கார்த்திக்:

அதாவது கோவிலில் கார்த்தி வராத காரணத்தினால் பரமேஸ்வரி பாட்டியை குழிக்குள் இறங்கச் சொல்கின்றனர். பாட்டி கண்டிப்பா என் பேரன் வந்துருவான்.. அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறார். மேலும் கார்த்திக் தொடர்ந்து போன் செய்ய போன் ரீச் ஆகாமல் இருக்கிறது. 

ஒரு கட்டத்தில் பரமேஸ்வரி பாட்டி குழியில் இறங்கபோகும் சமயத்தில் கார்த்திக் சிலை உடன் வந்து பாட்டியை தடுத்து நிறுத்துகிறான். அதன் பிறகு குருமூர்த்தி கூப்பிட்டு சொல்லுடா யார் சிலையை கடத்த சொன்னது என்று கேட்க அவன் சிவனாண்டியை மாட்டி விடாமல் நான் தான் என பழியை ஏற்றுக் கொள்கிறான்.

Continues below advertisement

மன்னிப்பு கேட்ட ஊர்மக்கள்:

அதன் பிறகு கோவிலில் பந்த கால் நடும் நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிய கும்பாபிஷேகமும் நல்லபடியா நடந்துட்டா போதும் என பரமேஸ்வரி பார்ட்டி வேண்டுகிறார். பிறகு ஊர் மக்கள் சாமுண்டீஸ்வரி சந்தித்து சிலைய நீங்க திருடல என இப்பதான் தெரிய வந்தது என்று மன்னிப்பு கேட்க ராஜராஜன் இதைத்தான் அன்னைக்கே சொன்னோம் என்று திட்டுகிறார். 

பிறகு ஊர் மக்கள் இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறோம் என்று மன்னிப்பு கேட்டு கலைந்து செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.